ஐபிஎல் 2023 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சிறந்த பிளேயிங் 11 குறித்து அஸ்வின் கருத்து..!!

ஐபிஎல் தொடரில் பல சாதனைகள் படைத்து முக்கிய அணியாக விளங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின், சிறந்த பிளேயிங் 11 குறித்து இந்திய அணியின் முன்னணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16 வது வரும் மார்ச் 31 2023 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களின் ஹாம் கிரவுண்டில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள், இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்களை கொண்ட முக்கிய அணியாக விளங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சிறந்த பிளேயிங் 11 குறித்து தனது இணையதள பக்கத்தில் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ஆர்.சி.பி அணியின் தொடக்க வீரர்கள் இடத்தில் அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் மற்றும் முன்னணி வீரர் விராட் கோலி களமிறங்க வேண்டும் என்று அஸ்வின் கூறினார். அதன்பின் முறையாக ரஜத் படிதார், க்ளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அஸ்வின் தேர்வு செய்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் பெங்களூரு அணியின் பவுலர்கள் யூனிட்டில் ஸ்பின்னர்கள் பிரிவில் மஹிபால் லோம்ரோர் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இருவரையும் , வேகப்பந்து பவுலர்களில் ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரையும் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் தேர்வு செய்த பெங்களூரு அணியின் சிறந்த பிளேயிங் 11 : பாப் டு பிளெசிஸ் (கேப்டன்) விராட் கோலி, ரஜத் படிதார், க்ளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (வி.கீ) மஹிபால் லோம்ரோர்/அனுஜ் ராவத், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி : விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டூ பிளெசிஸ், ஹர்ஷல் பட்டேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அஹ்மத், ரஜத் படிதார், அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசில்வுட், மஹிபால் லோம்ரோர், ஃபின் ஆலன், சுயாஷ் சித் ஷர்மா, கர்த் பிரபுதேஸ் கவுல், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு ஷர்மா, வில் ஜாக்ஸ், மனோஜ் பந்தேஜ், ராஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ், மைக்கேல் பிரேஸ்வெல்.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.