IND VS AUS TEST 2023 : 4வது டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்..!! | r ashwin breaks multiple records in test 2023

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கு உதவும் வகையில் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் ஆர்டரை சிதறடித்து பல சாதனைகள் படைத்து அசத்தியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகிறது, இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்குக்கு தனது சூழல் பவுலிங் மூலம் முடிவு கட்டினார் இந்திய அணியின் முன்னணி பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் அஸ்வின் முதல் நாள் நாள் முடிவில் வெறும் ஒரு விக்கெட்டை பெற்றிருந்த நிலையில், இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு சவாலாக இருந்த கவாஜா மற்றும் கிரீன் இருவரின் பேட்டிங் பார்ட்னெர்ஷிப் புக்கு முடிவு கட்டி இந்திய அணிக்கு பெரிதும் உதவினார், குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் கேமரூன் கிரீன் 114(170), அலெக்ஸ் கேரி 0(4), ஸ்டார்க் 6(20), நாதன் லியோன் 34(96) மற்றும் டாட் மர்பி 41(61) ஆகியோரின் விக்கெட்களை பெற்றார்.
இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அஸ்வின் 32 வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி உள்ளார், மேலும் முக்கிய சாதனையாக இந்திய மண்ணில் 26 வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே (25 முறை )உடைய சாதனையை முறியடித்துள்ளார். மேலும் தங்கள் சொந்த மண்ணில் அதிக முறை 5 விக்கெட்டுகள் பெற்றவர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
அதாவது சொந்த மண்ணில் டெஸ்ட் அரங்கில் அதிக முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் பெற்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 45 முறையும் (73 போட்டிகளில்), இரண்டாவது இடத்தில் முன்னாள் இலங்கை வீரர் ரங்கன ஹேரத் 26 முறை (49 போட்டிகளில் ) , தற்போது இந்திய வீரர் அஸ்வின் 56 போட்டிகளில் 26 வது முறையாக 5 விக்கெட்டுகளுக்கு மேல் பெற்று 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை பெற்றதன் மூலம் பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்டுகள் பெற்றவர் பட்டியலில் 113 விக்கெட்களுடன் ஆஸ்திரேலியா வீரர் நாதன் லியோன் உடன் அஸ்வின் இணைகிறார், மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் பெற்ற இந்திய பவுலர் என்ற பெருமையை பெற்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 4வது டெஸ்ட் போட்டியில் 2வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் பதிவு செய்து அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 17*(33) மற்றும் சுப்மன் கில் 18 (27) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய அணி 36 ரன்கள் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.