IND VS AUS TEST 2023 : ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் அஸ்வின், ஜடேஜா முன்னேற்றம்…!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தல் மிரட்டல் பௌலிங்கை வெளிப்படுத்திய அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர், அவரை தொடர்ந்து ஜடேஜாவும் முன்னிலை பெற்று அசத்தியுள்ளார்.
இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 132 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் தான், குறிப்பாக அணியின் முன்னணி பௌலர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஜடேஜா 7 விக்கெட்டுகளை பெற்றார்.
இந்திய அணிக்காக மகத்தான பவுலிங்கை வெளிப்படுத்திய தன் மூலம் ஐசிசியின் டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 2வது இடத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னேறியுள்ளார், மேலும் 5 மாதங்களாக காயம் ஏற்பட்டு ஓய்வில் இருந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பவுலர்கள் தரவரிசையில் 16 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
இந்திய அணி அடுத்து டெல்லியில் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்களை கட்டுப்படுத்த இந்த இருவரின் பங்களிப்பை மிகவும் முக்கியம் என்பதில் ஐயமில்லை. மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் சிறந்த பங்களிப்பை அளித்த வீரர்கள் முன்னேற்றம் அடைந்ததால் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் 3-0 என்ற நிலையில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற வாய்ப்புள்ளது என்பதால் ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியையும் மிகுந்த ஆர்வத்தில் எதிர்நோக்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.