IND VS AUS TEST 2023 : ஆஸ்திரேலிய அணியின் இமாலய இன்னிங்சை முடிவுக்கு கொண்டு வந்த அஸ்வின்..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இமாலய இலக்கை இந்திய அணிக்கு வழங்கியுள்ளது.
இந்த போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் பதிவு செய்தது, அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஆஸ்திரேலியா அணியின் இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா உடைய அற்புதமான இன்னிங்ஸ் என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் மீண்டும் அதிரடியை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்கள் கவாஜா மற்றும் கிரீன் இந்தியா பவுலர்களை திணறடித்தார்கள்.மேலும் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் கேமரூன் கிரீன் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார், தொடர்ந்து கவாஜா சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார்.
அதன்பின் களத்தில் மீண்டும் இறங்கிய இந்திய அணியின் முன்னணி பவுலர் அஸ்வின் கிரீன் மற்றும் அலெக்ஸ் கேரி உடைய விக்கெட்டை பெற்று அணிக்கு உதவினார், இந்திய அணியை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா உடைய விக்கெட்டை அக்சர் படேல் பெற்று அசத்தினார்.இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் விக்கெட்டுகளை பெற்று இந்திய அணியின் காப்பானாக செயல்பட்டார் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்களை பதிவு செய்துள்ளது, மேலும் இந்திய அணி சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை பெற்றார். இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் இன்னும் 3 நாட்களில் ஆஸ்திரேலிய அணி அளித்துள்ள இமாலய இலக்கை அடைய என்ன செய்ய போகிறது என்று ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.