ஐபிஎல் தொடரில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டு வரும் முன்னணி வீரர்கள்..!! அணில் கும்ப்ளே வருத்தம் .!!

இந்தியாவின் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரில் சிறந்த திறன் இருந்தும் மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட இரண்டு முன்னணி இந்திய வீரர்கள் பற்றி முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆக உள்ளது, இந்நிலையில் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரின் கவனமும் தொடரின் மீது தான் உள்ளது. ஐபிஎல் தொடரில் அண்மையில் நடந்த ஏலத்தில் இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்கள் தான் அதிகப்படியான விலைக்கு அணிகள் மூலம் வாங்கப்பட்டார்கள்.
அதாவது ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன் மூலம் பல வீரர்கள் அனைவரின் கவனத்தையும் கிரிக்கெட் வட்டாரத்தில் ஈர்த்துள்ளார்கள், ஆனால் சில வீரர்கள் அணிக்காக ஐபிஎல் தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியும் மிகவும் குறைவான மதிப்பீட்டில் உள்ள வீரர்கள் பட்டியலில் உள்ளார்கள் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் குறைவாக மதிப்பிட பட்டுள்ள முன்னணி இந்திய வீரர்கள் பற்றி ஜியோ சினிமா தளத்தில் நடந்த விவாதத்தில் தனது கருத்தை முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பதிவு செய்துள்ளார்.
இதில் பேசிய அனில் கும்ப்ளே கூறியது, இந்திய அணியின் முன்னணி வீரர்கள் மயங்க அகர்வால் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியும் மிகவும் குறைவாக மதிப்பீட்டில் இருக்கும் வீரர்கள் எனது பார்வையில் இருக்கிறார்கள் என்று கூறினார்.
அதன்பின் பேசிய அனில் கும்ப்ளே ஐபிஎல் தொடரில் 2011 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் மயங்க அகர்வால், இதுவரை 113 போட்டிகளில் 2327 ரன்கள் பதிவு செய்துள்ளார்.அதேபோல் ஐபிஎல் தொடரில் எந்த அணியில் இடம் பெற்றாலும் தனது சிறப்பான பவுலிங் மூலம் அணிக்கு முக்கிய வீரராக யுஸ்வேந்திர சாஹல் திகழ்பவர், ஆனால் இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் அங்கீகரிக்க படாத குறைந்த மதிப்பீடு உடைய வீரர்களாக உள்ளார்கள் என்று கூறினார்.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வாங்கப்பட்டுள்ள மயங்க அகர்வால் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள யுஸ்வேந்திர சாஹல் இருவரும், வழக்கம் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.