ரிஷப் பந்த் விபத்துக்கு பிறகு.. அவசர அவசரமாக பள்ளத்தை சீரமைத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: January 02, 2023 & 10:59 [IST]

Share

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் பயங்கர கார் விபத்தில் சிக்கியதை அடுத்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேற்று அதிகாலையில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது. 

தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் பந்த், விபத்து நடந்த நேரத்தில் பள்ளத்தை தவிர்க்க முயன்றதாக தெரிவித்தார். நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக சீரமைப்பு பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அறிக்கைகளின்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) குழு சனிக்கிழமை மதியம் தேசிய நெடுஞ்சாலை-58 இல் ஆய்வு செய்து, இரவில் தாமதமாக பள்ளங்களை நிரப்பியது. டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (DDCA) இயக்குனர் ஷியாம் ஷர்மா மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் ரிஷப் பந்த், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் விபத்து நடந்தபோது பள்ளத்தை தவிர்க்க முயன்றதாக கூறியுள்ளார். 

டேராடூனில் பந்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் தமி கூறுகையில், "வாகனத்தை ஓட்டும் போது பள்ளம் போன்ற ஒன்று மற்றும் ஏதோ கருப்பு நிறத்தில் இருப்பதைக் கண்டதாக ரிஷப் பந்த் என்னிடம் கூறினார்." என்று கூறினார்.

இருப்பினும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) திட்ட இயக்குனர் (ரூர்க்கி) பிஎஸ் ஹுசைன், சாலையில் குழிகள் இல்லை என்றும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள் சாலையை சீரமைக்க சில ஒட்டுவேலைகளை மட்டுமே செய்ததாகவும் கூறினார். பந்த் பார்த்தது ஒரு அலையாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.