ENG Vs AFG 1st Innings: இங்கிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு
![ENG Vs AFG 1st Innings: இங்கிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு](https://www.sportspartans.com/assets/uploads/news-2416.jpg)
இன்று அருண் ஜெட்லி டெல்லி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 13வது ODIஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் அமர்க்களமாக தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். 16வது ஓவரில் இப்ராஹிம் சத்ரன் (28) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரஹ்மத் ஷா களமிறங்க ஆப்கானிஸ்தான் ரன்களை எடுக்க தொடங்கியது. இப்ராஹிம் சத்ரன் தொடர்ந்து ரஹ்மத் ஷா (3), ரஹ்மானுல்லா குர்பாஸ் (80), அஸ்மத்துல்லா உமர்சாய் (19), ஹஷ்மத்துல்லா ஷாஹிதி் (14), முகமது நபி (9), ரஷித் கான் (23), முஜீப் உர் ரஹ்மான் (28), நவீன்-உல்-ஹக் (5), எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் ஃபசல்ஹக் பாரூக்கி (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 284 ரன்கள் எடுத்துள்ளனர். போட்டியின் முதல் இன்னிங்ஸில் அடில் ரஷித் (3), மார்க் வூட் (2), லியாம் லிவிங்ஸ்டன்(1), ஜோ ரூட்(1) விக்கெட்டுகள் எடுத்தனர்.