டி20 கிரிக்கெட்டில் சிறந்த பிளேயர் இவர் தான்..!! ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டு..!! ரசிகர்கள் நெகிழ்ச்சி

கிரிக்கெட் உலகில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மிஸ்டர் 360 என்று அழைக்கப்பட்ட முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் அனைத்து வித டி20 தொடர்களையும் சேர்ந்து சிறந்த டி20 வீரர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார், இந்த பதிவின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்கள்.
கிரிக்கெட் விளையாட்டில் குறைந்த ஓவர் கிரிக்கெட் தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு சமீப காலத்தில் இருந்து வரும் நிலையில், உலக அளவில் பல டி20 தொடர்கள் நடைபெற்று வருகிறது.மேலும் உலகின் முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச டி20 தொடர் என இரண்டிலும் அதிக ரன்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த பெருமைக்குரிய வீரராக கிறிஸ் கெயில் விளங்குகிறார், மேலும் முன்னணி வீரர்கள் ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர், டிம் சௌத்தி உள்ளிட்ட பலர் இருக்கையில் ஏபி டி வில்லியர்ஸ் இவர்கள் அனைவரையும் தவிர்த்து புதிய வீரரை டி 20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என்று பதிவு செய்துள்ளார்.
அதாவது சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் பேசிய ஏபி டி வில்லியர்ஸ், என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர் என்றால் அது ரஷீத் கான் தான் என்று கூறினார், மேலும் டி20 போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கி தனது அணிக்கு ஆல்ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று தருகிறார் , சமீபத்தில் இளம் வயதில் டி20 தொடரில் 500 விக்கெட்கள் கைப்பற்றிய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார் என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஏபி டி வில்லியர்ஸ், ரஷீத் கான் களத்தில் முழு ஈடுபாடுடன் விளையாடி எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று முழுவீச்சில் செயல்படுகிறார் என்னை பொறுத்தவரை டி 20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர் ரஷீத் கான் தான் என்று கூறினார்.
இந்த பதிவை பார்த்த கிரிக்கெட் நிபுணர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் உலகின் முன்னணி வீரர்கள் பலர் உள்ள நிலையில் இளம் வீரர் ரஷித் கானை சிறந்த கிரிக்கெட் வீரராக பாராட்டியதை நினைத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.