ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி குறித்த முக்கிய அப்டேட்..!! | rcb vs kkr 2023 update

ஐபிஎல் 2023 போட்டிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் அடுத்த போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் எதிர்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு, ட்ரீம் லெவன் டீம் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் சிறப்பான பார்மில் உள்ளது, குறிப்பாக 7 போட்டிகளில் பங்கேற்று 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முன்னிலையில் உள்ளது. அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை 7 போட்டிகளில் 2 மட்டுமே வெற்றி பெற்று மிகவும் மோசமான நிலையில் தவித்து வருகிறது.
இந்நிலையில் பெங்களூர் அணி தொடரில் தனது வெற்றி பயணத்தை தொடர முழுவீச்சில் பங்கேற்பார்கள், அதே போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வரும் வகையில் வெற்றி பெற போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இரு அணிகள் சார்பில் ஒரு அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை.
போட்டி குறித்த விவரம் :
36 வது லீக் போட்டி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & புதன்கிழமை
தேதி : 26 ஏப்ரல் 2023
மைதானம் : எம்.சின்னசாமி மைதானம்,பெங்களூரு.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள சின்னசாமி மைதானம் மிரட்டல் பேட்டிங்குக்கு பேர்போன மைதானம் ஆகும், இதுவரை இந்த பிட்சில் நடப்பு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடிய அணிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் இரு அணிகள் சார்பில் அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - பாப் டு பிளெஸ்ஸிஸ்
துணை கேப்டன் - கிளென் மேக்ஸ்வெல்
விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக்
பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, ரின்கு சிங், நிதிஷ் ராணா, ஜேசன் ராய்.
ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல்.
பந்துவீச்சாளர்கள் - வருண் சக்கரவர்த்தி, வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ்.
வெற்றி கணிப்பு :
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை நடப்பு ஐபிஎல் தொடரில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறது, குறிப்பாக கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளில் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்ட முன்னணி வீரர் விராட் கோலி அணிக்கு அசத்தல் வெற்றியை பெற்றுத் தந்து முன்னணியில் வைத்துள்ளார்.
அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடரில் ஆரம்பத்தில் வெற்றி பெற்ற பிறகு தொடர்ச்சியாக தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் மிகவும் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றிக்கான வாய்ப்பு மிரட்டல் பார்மில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் (தோராயமான ) : விராட் கோலி (கேப்டன்), பாப் டு பிளெஸ்ஸிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (வி.கீ), சுயாஷ் பிரபு தேசாய், டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், விஜயகுமார் வைஷாக்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : என் ஜெகதீசன்(வி.கீ), ஜேசன் ராய், நிதிஷ் ராணா(கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், சுனில் நரைன், டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் சர்மா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.