பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி குறித்த முழு விவரம்..!!| pbks vs mi ipl 2023 preview

ஐபிஎல் 2023 தொடரில் அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எதிர்கொள்ள உள்ளார்கள். இந்த மிரட்டல் போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு, ட்ரீம் லெவன் டீம் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்கள் பற்றி காண்போம்.
பஞ்சாப் கிங்ஸ் அணியானது கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் நடப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியானது கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் நடப்பு தொடரில் போட்டிகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ள நிலையில் இரு அணிகளும் புள்ளி பட்டியலில் முன்னேறும் வகையில் அடுத்து வரும் போட்டிகளில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி குறித்த விவரம் :
46 வது லீக் போட்டி : பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & புதன்கிழமை
தேதி : 3 மே 2023
மைதானம் : பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐ எஸ் பிந்த்ரா மைதானம், மொஹாலி.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐ எஸ் பிந்த்ரா மைதானத்தில் உள்ள பிட்சில் பெரிய அளவில் பேட்டிங் ரெகார்ட் பதிவாகவில்லை மேலும் போட்டியின் தொடக்கத்தில் சற்று பவுலிங் சிறப்பாக வெளிப்படுத்த உதவும் என்று தெரிய வந்துள்ளது, குறிப்பாக டாஸ் வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்து சேஸ் செய்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - சூர்யகுமார் யாதவ்
துணை கேப்டன் - லியாம் லிவிங்ஸ்டோன்
விக்கெட் கீப்பர் - ஜிதேஷ் சர்மா
பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான், திலக் வர்மா,
ஆல்-ரவுண்டர்கள் - கேமரூன் கிரீன், சாம் குர்ரன்,சிக்கந்தர் ராசா.
பந்துவீச்சாளர்கள் - பியூஷ் சாவ்லா, அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா.
வெற்றி கணிப்பு :
பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக திரில் வெற்றி பெற்று நல்ல பார்மில் உள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று அசத்தல் பார்மில் உள்ளது.
இந்நிலையில் தங்கள் வெற்றி பயணத்தை தொடரும் வகையில் இரு அணிகள் சார்பில் அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை, குறிப்பாக முதல் கட்ட லீக் சுற்றில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் சந்தித்த போது பஞ்சாப் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற முயற்சிக்கும், அதற்கு எதிராக பஞ்சாப் அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் இந்த போட்டியில் இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு சம அளவில் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : அதர்வா டைடே, ஷிகர் தவான்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், சிக்கந்தர் ராசா, சாம் குர்ரன், ஜிதேஷ் சர்மா(வி.கீ), ஷாருக் கான், ஹர்பிரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(வி.கீ ), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித், அர்ஷத் கான்.