கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான கணிப்புகள் ஒரு பார்வை..!! | kkr vs gt 2023 ipl prediction

ஐபிஎல் 2023 தொடரில் அனைத்து அணிகளுக்கும் முதல் கட்ட லீக் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து, இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் அடுத்த லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதும் உள்ள நிலையில், இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், வெற்றி கணிப்பு, பிட்ச் அறிக்கை, ட்ரீம் லெவன் டீம் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
இந்த தொடரில் நிதிஷ் ராணா தலைமையில் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதே சமயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
போட்டி குறித்த விவரம் :
39 வது லீக் போட்டி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
நேரம் & நாள் : 3:30 p.m & சனிக்கிழமை
தேதி : 29 ஏப்ரல் 2023
மைதானம் : ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - சுப்மான் கில்
துணை கேப்டன் - ஜேசன் ராய்
விக்கெட் கீப்பர் - என் ஜெகதீசன்
பேட்ஸ்மேன்கள் - நிதிஷ் ராணா, டேவிட் மில்லர், ரிங்கு சிங்
ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா
பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், வருண் சக்கரவர்த்தி, நூர் அகமது.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள ஈடன் கார்டன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் உதவும் தன்மை கொண்டது என்று தெரியவந்துள்ளது, குறிப்பாக இரு அணிகள் சார்பில் சிறப்பான ஆட்டம் அரங்கேறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் போட்டி மதிய நேரத்தில் நடைபெற உள்ளதால் பிட்ச் சற்று ஸ்லோவாக இருக்கும் என்பதால், ஸ்பின்னர்கள் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
வெற்றி கணிப்பு :
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதிய போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று, நடப்பு தொடரில் ஏற்பட்ட தொடர் தோல்விக்கு முடிவு கட்டி உள்ளது. அதே சமயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று மிரட்டல் பார்மில் உள்ளது. இந்த போட்டியில் இரு அணிகள் சார்பில் வெற்றி பயணத்தை தொடர அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை, இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் சம அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : என் ஜெகதீசன்(வி.கீ), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், உமேஷ் யாதவ், சுனில் நரைன், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய்.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : விருத்திமான் சாஹா(வி.கீ), சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, ஜோசுவா லிட்டில், மோகித் சர்மா, முகமது ஷமி.