கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஜேசன் ராய்க்கு பிசிசிஐ அபராதம் விதிப்பு..!! | jason roy fined by bcci 2023

ஐபிஎல் 2023 தொடரில் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள், இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய்க்கு ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதால் பிசிசிஐ தரப்பில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கோலி தலைமையில் ஆன பெங்களூரு மற்றும் நிதிஷ் ராணா தலைமையில் ஆன கொல்கத்தா அணிகள் மோதினார்கள். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் பெங்களூர் அணி பவுலர்களை சிதறடித்து ரன்கள் குவித்தார்.
கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்த அனுபவ வீரர் ஜேசன் ராய் அரைசதம் பதிவு செய்தார், குறிப்பாக 29 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 56 ரன்கள் பதிவு செய்து அசத்தினார். அதன்பின் பெங்களூர் அணி வேகப்பந்து பவுலர் விஜயகுமார் வைஷாக் பந்தில் போல்ட் ஆனார், இப்போது கோபமடைந்த ராய் ஸ்டம்ப் பில் இருந்த பைல்ஸை தட்டி விட்டு சென்றார்.
இதன் மூலம் ஜேசன் ராய் ஐபிஎல் தொடரின் 2.2 விதியை மீறியதாக கருதப்பட்டு, பிசிசிஐ தரப்பில் இருந்து ராய் உடைய நேற்றைய போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஜேசன் ராய் அதிரடியில் பெங்களூர் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்து என்பது குறிப்பிடத்தக்கது.