பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் மோதும் மிரட்டல் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன்.!! | ipl rcb vs lsg live score

ஐபிஎல் தொடரில் 15 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள், இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெளியானது.
ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் பாப் டூ பிளேஸிஸ் தலைமையில் களமிறங்கி விளையாடி வரும் பெங்களூர் அணி, பங்கேற்ற முதல் 2 போட்டிகளில் ஒரு அதிரடியான வெற்றி மற்றும் ஒரு மோசமான தோல்வி என இரண்டையும் பெற்று உள்ளது. அதே சமயத்தில் கே எல் ராகுல் தலைமையில் ஆன லக்னோ அணி பங்கேற்ற 3 போட்டிகளில் முதல் போட்டியில் தோல்வி பெற்றாலும், அடுத்த 2 போட்டிகளில் தனது ஹோம் கிரவுண்டில் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்டிங் மற்றும் பவுலிங் கொண்டுள்ள அணியாக தான் உள்ளது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தொடர் வெற்றிகளை பெற்று முன்னணியில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய பாப் டூ பிளேஸியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி லக்னோ அணிக்கு நல்ல இலக்கை அளிக்குமா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் : விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக்(வி.கீ), அனுஜ் ராவத், டேவிட் வில்லி, வெய்ன் பார்னல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் : கேஎல் ராகுல்(கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்(வி.கே), ஜெய்தேவ் உனத்கட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், மார்க் வூட், ரவி பிஷ்னோய்.