பிக்பாஷ் 2022-2023 : அதிரடியான போட்டியில் மத்தேயு ஷார்டி சதம் விளாசினார்..! அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 05, 2023 & 18:30 [IST]

Share

ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு தொடர்களில் முக்கிய தொடராக விளங்கும் பிக்பாஷ் லீகின் 30-வது போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும்  ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் விளையாடினார்கள்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் கேப்டன் மத்தேயு ஷார்ட் பௌலிங்கை தேர்வு செய்தார்,இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பென் மெக்டெர்மாட் மற்றும் காலேப் ஜூவல் இருவரும் அரைசதம் கடந்து  அதிரடியான தொடக்கத்தை அளித்து தங்களின் விக்கெட்டை இழந்தார்கள்.

அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தாக ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் சாக் கிராலி மற்றும் டிம் டேவிட் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.இதனால் 20-ஓவர்கள் முடிவில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 229 ரன்களை பதிவு செய்தது.

இரண்டாவது இன்னிங்சில் 230 ரன்கள் அடித்தால் என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ரியான் கிப்சன் 5 ரன்களில் ஆட்டமிழக்க,அதன்பின் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் மத்தேயு ஷார்ட் மற்றும் கிறிஸ் லின் அதிரடியாக விளையாடினார்கள்.

அணியின் அனுபவ வீரரான கிறிஸ் லின் 64(29) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்,இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுமையாக விளையாடிய அணியின் கேப்டன் மத்தேயு ஷார்ட் 100*(59) ரன்களை அடித்தார், இதில் 8 பவுண்டரிகள் 3-சிக்சர்கள் அடங்கும்.

இந்நிலையில் 230 ரன்கள் என்ற இமாலய இலக்கை 19.3 ஓவர்களில் அடித்து அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது,அணியின் வெற்றிக்கு பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் பங்களித்த மத்தேயு ஷார்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.