ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்களுக்கு பதில், 11 ஓவர்கள் வீசிய நியூசிலாந்து வீராங்கனை.. ஷாக் ஆன ரசிகர்கள்.. நல்ல கவனிச்சாரு நடுவர் போங்க..

இலங்கை: ஒருநாள் கிரிக்கெட்டில், நியூசிலாந்து வீராங்கனை ஒருவர் 11 ஓவர்களை வீசியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இரண்டாவது போட்டியில், நியூசிலாந்து சுழற்பந்து வீச்சு வீராங்கனை ஈடன் கர்சன் ஆட்டத்தின் 45ஆவது ஓவரை வீசினார். இது அவருக்கு 11ஆவது ஓவராக இருந்தது. யாருமே இந்த மாபெரும் தவறை கண்டுகொள்ளவில்லை. 21 வயதாகும் ஈடன் கர்சன், 1993ஆம் ஆண்டிற்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஓவர்களை வீசிய வீராங்கனை என்ற வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார். அந்த ஓவரில் கர்சன் ஒரு ரன்னை மட்டும்தான் விட்டுக்கொடுத்தார். விக்கெட் எதுவும் இல்லை.
நடுவர் இதனை கவனிக்கவே இல்லை. ஆட்டத்தின் 4ஆவது பந்தின்போது தான் இதனை மூன்றாம் நடுவர் மூலம் கண்டுபிடித்தார். இருப்பினும், 4 பந்துகள் வரை வீசிவிட்டதால், கடைசி இரண்டு பந்துகளை வீச அனுமதி வழங்கப்பட்டது.1995ஆம் ஆண்டுவரை, ஒருநாள் கிரிக்கெட்டில் 55 ஓவர்கள் வரை இருந்தது. ஒவ்வொரு பௌலரும் அதிகபட்சமாக 11 ஓவர்களை வீச முடியும். அதன்பிறகு, ஒவ்வொரு பௌலரும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 10 ஓவர்களை மட்டும்தான் வீச முடியும் என்ற நிலை இருந்தது. இருப்பினும், இந்த விதிமுறையை மீறி, நடுவர்களின் கவனத்திலும் படாமல் 4 பந்துவீச்சாளர்கள் தவறுதலாக 11 ஓவர்கள் வரை வீசியிருக்கிறார்கள்.
தற்போது இலங்கை, நியூசிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி, வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி அசத்தியது. ஆனால் இரண்டாவது போட்டியில் அந்த அணி நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது.