ஆறு வருட காத்திருப்பிற்கு கிடைத்த வெற்றி ..! சிவம் மாவி உருக்கமான பதிவு..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 04, 2023 & 11:30 [IST]

Share

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் முதல் டி-20 போட்டியில் விளையாடினார்கள்,இதில் இந்திய அணி சார்பில் தங்களின் முதல் சர்வதேச டி-20 போட்டியில் விளையாட வேகப்பந்து பௌலர் சிவம் மாவி மற்றும் பேட்ஸ்மேன் சுப்மன் கில் இருவரும்  களமிறக்க பட்டார்கள்.

இந்தியாவின்   2018 உலகக்கோப்பை அண்டர்-19 அணியில்  சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தை ஈர்த்தார் இளம் வீரர் சிவம் மாவி,அவரின் திறமையை பார்த்து  ஐ.பி.எல் ஏலத்தில் கொல்கத்தா அணி வாங்கியது சில போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய மாவி பிறகு காயம் ஏற்பட்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காமல் விலகி இருந்தார்.

இந்நிலையில் அண்மையில் நடந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 6 கோடிக்கு வாங்கப்பட்ட மாவி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தார்.அதன்பின் இலங்கை எதிரான தொடரில் இடம்பெற்று தனது முதல் சர்வதேச  டி-20 போட்டியில் பங்கேற்றார்.

சிவம் மாவி தன் மீது இருக்கும் அனைத்து எதிர்பார்ப்பிற்கும் பதிலளிக்கும் விதமாக அதிரடியான பௌலிங்கால் இலங்கை அணி வீரர்கள் திணறடித்தார், மேலும் தனது முதல் போட்டியிலேயே 4-விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.இது குறித்து  கருத்து தெரிவித்த மாவி இந்த தருணத்திற்காக 6 வருடங்களாக காத்திருந்தாக தெரிவித்தார்.

கடந்த 6 வருடங்களாக தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள், தனது விட முயற்சி,கடின உழைப்பு என அனைத்திற்கும் கிடைத்த வெற்றியாக இதை பார்ப்பதாக கூறினார் மாவி.சிவம் மாவி இதே போல் அடுத்து வரும் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

தனது முதல் டி-20 போட்டியில் சிறப்பான பௌலிங்கால் கலக்கிய இந்திய வீரர்கள் பட்டியலில் மாவி 4-22 விக்கெட்களை கைப்பற்றி மூன்றாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி ஓவர் வரை சென்ற  இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற வகையில் முன்னிலையில் உள்ளது,அடுத்த டி-20 போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேவில் நடைபெற உள்ளது.