ஐபிஎல் ஏலத்தில் முக்கிய வீரர்களின் அடிப்படை விலை விவரம்

நிக்கோலஸ் பூரான்: மேற்கிந்திய தீவு அணியைச் சேர்ந்த இவர், ஐபிஎல் போட்டிகளில், இறுதியாகக் களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் போட்டியின் போக்கையே மாற்றி விடுவார். இவர் ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையாக 2 கோடியைப் பதிவு செய்துள்ளார்.

கேன் வில்லியம்சன்: சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், அணியைத் திறமையாக வழிநடத்தும் கேப்டனாக கேன் வில்லியம்சன் செயல்படுகிறார். இவரும் இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அடிப்படை விலையாக 2 கோடியைப் பதிவு செய்துள்ளார்

மயங்க் அகர்வால்: ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடியவர் மயங்க் அகர்வால். இவர், ஐபிஎல் ஏலத்தில் தனது அடிப்படை விலையாக 1 கோடியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாரி புரூக்: இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஹாரி புரூக் வரும் ஐ.பி.எல் ஏலத்தில் முதல் முறையாக பங்கேற்க உள்ளார். இவர், தனது அடிப்படை விலையாக 1.5 கோடியைப் பதிவு செய்துள்ளார்.

ரிலீ ரோசோவ்: தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்த்த ஆல்ரவுண்டரான இவரை வாங்க அனைத்து அணிகளும் முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இரண்டு பிஎல் தொடர்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்: ஐ.பி.எல் 2023 தொடருக்கான மினி ஏலத்தில் பங்குபெறும் வீரர்களில் அனைத்து அணிகளும் வாங்க முற்படும் ஒரு முக்கிய வீரர் பென் ஸ்டோக்ஸ். இந்த ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க தனது அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நியமித்துள்ளார்.

மனிஷ் பாண்டே: ஐ.பி.எல் தொடரில் தனது நேர்த்தியான ஆட்டத்தினால் பல ரசிகர்களைக் கவர்ந்த வீரர்களில் ஒருவராக மனிஷ் பாண்டே உள்ளார். இவர், இந்த ஐ.பி.எல் 2023 ஏலத்தில் தனது அடிப்படை விலையை 1 கோடி ரூபாயை நியமித்துள்ளார்.

சாம் கர்ரன்: இங்கிலாந்து வீரரான இவர், 2020, 2021 ஐபிஎல் தொடர்களில் CSK அணிக்காக சிறப்பாக விளையாடினார். இவர் இந்த ஏலத்தில் தனது அடிப்படை விலையாக ரூ.2 கோடி நியமித்துள்ளார்.

கிறிஸ் லின்: ஐ.பி.எல் தொடரில் அதிரடியான தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் லின் அதிகமுறை கொல்கத்தா அணிக்காகச் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். 2023 ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கத் தனது அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நியமித்துள்ளார்.

கேமரூன் கிரீன்: இதுவரை ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காத ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பௌலிங் ஆல்ரவுண்டரான இளம் வீரர் கேமரூன் கிரீன் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் தனது அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நியமித்துள்ளார்.