U-23 World Wrestling Championship 2022 : ஒரு வெள்ளி.. மூன்று வெண்கலம்.. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா அசத்தல்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: October 21, 2022 & 15:26 [IST]

Share

U-23 World Wrestling Championship 2022 : யு23 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று பலம் வாய்ந்த யுய் சுசாகியிடம் வீழ்ந்த பின்னர் அங்குஷ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதே சமயம் விகாஸ் (72 கிலோ) மற்றும் நித்தேஷ் (97 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

யு-23 உலக சாம்பியன்ஷிப், ஸ்பெயினின் பொன்டெவெட்ராவில் நடந்தது. இதில் நேற்று நடந்த மகளிர் 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானிய வீராங்கனை சுஸாகி இந்திய வீராங்கனை அங்குஷை வெறும் இரண்டு நிமிடங்களுக்குள் வீழ்த்தி மல்யுத்தத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

தோல்வியைத் தழுவிய இந்திய வீராங்கனை அங்குஷ் வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பினார். இதற்கிடையே ஆடவர் பிரிவில் சஜன் பன்வாலா 77 கிலோ பிரிவில் வெண்கலம் வென்ற ஒரு நாள் கழித்து விகாஸ் மற்றும் நித்தேஷ் ஆகியோர் இந்தியாவிற்கு மேலும் இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்றுக் கொடுத்தனர்.

இதன் மூலம் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.