ப்ரோ கபடி லீக் 2022: அரையிறுதிக்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த தமிழ் தலைவாஸ் அணி..! சோகத்தில் உ.பி யோதாஸ் அணி..!

Representative Image. Representative Image.

By Editorial Desk Published: December 14, 2022 & 19:15 [IST]

Share

ப்ரோ கபடி லீக்கின் எலிமினேட்டர்-2 ரவுண்டில் தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி யோதாஸ் அணிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் உள்விளையாட்டு மைதானத்தில் மோதினார்கள். எலிமினேட்டர்-1 ரவுண்டில் பெங்களூரு புல்ஸ் அணி தபாங் டெல்லி அணியை தோற்க்கடித்தது அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழ் தலைவாஸ் அணி ரைட் செய்ய முடிவெடுத்து, வேகமாக  4-0 என்ற புள்ளிகள் அடிப்படையில்  முன்னிலை பெற்றது. அதன்பிறகு தொடர்ந்து இருஅணிகளுக்கு இடையில் பரபரப்பான நிலையில் ஆட்டம் நடைபெற்றது. முதல் பாதியின் முடிவில் 14-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலையிலிருந்தது.

அடுத்தாக இரண்டாவது பாதி தொடங்கியதும் விரைவாகச் செயல்பட்ட தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளைப் பெறத் தொடங்கினார்கள். அதற்கு ஈடு கொடுக்கும்  வகையில் சிறப்பாக விளையாடிய உ.பி யோதாஸ் அணியும் சமமாகப் புள்ளிகளைப் பெற்றது. இந்நிலையில் இறுதியாகப் போட்டியில்  36-36 இருஅணிகளும் சமமான புள்ளிகளைப் பெற்றதால் ஆட்டம் டையில் முடிந்தது.

அதன்பின் போட்டியின் முடிவை அறிய டை-பிரேக்கர் முறையில் ஆட்டம் தொடர்ந்தது. அதில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 6-4 என்ற புள்ளிகள் அடிப்படையில் உ.பி யோதாஸ் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நரேந்தர் 13-புள்ளிகளையும்  கேப்டன் அஜிங்க்யா பவார் 10-புள்ளிகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ப்ரோ கபடி வரலாற்றில் பிளேஆஃப் சுற்றுக்கே வராத தமிழ் தலைவாஸ் அணியை அரையிறுதி வரை அழைத்து வந்த அணியின் பயிற்சியாளர் அஷன் குமாரை தமிழக கபடி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இதே போல் சிறப்பாக விளையாடி தமிழ் தலைவாஸ் அணி இந்த முறை சாம்பியன் பட்டதை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்து வரும் போட்டிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.