இந்தியாவுக்கு முதல் தங்கம்.. ஜூடோகோவில் வரலாறு படைத்த லிந்தோய் சனம்பம்!!

போஸ்னியா நாட்டின் சரஜேவோவில் நடைபெற்ற கேடட் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் பிரேசிலின் பியான்கா ரெய்ஸை தோற்கடித்து, இந்திய ஜூடோகா லிந்தோய் சனம்பம், இந்தியாவிற்கு ஜூடோகோ போட்டியில் முதல் தங்கத்தை பெற்று கொடுத்து வரலாறு படைத்துள்ளார்.
நேற்று நடந்த தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் அவர், பிரேசில் வீரரை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்து பதக்கத்தை வென்றார். இதையடுத்து இந்திய விளையாட்டு ஆணையம், ஜூடோகோ விளையாட்டில் உலகில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை லின்தோய் வென்றார் என்று ட்வீட் செய்தது.
கேடட், ஜூனியர் அல்லது சீனியர் என எந்த வயதினர் பிரிவிலும் இதற்கு முன்பு உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா பதக்கம் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லிந்தோய் சனம்பம், மத்திய அரசு செயல்படுத்தி வரும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் (TOPS) கீழ் சிறப்பு பயிற்சியை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.