சென்னையில் நடந்த தொடரில் விபரீதம்..! தமிழக கார் ரேஸ் வீரர் கே.இ.குமார் மரணம்..!

தமிழகத்தை சேர்ந்த பிரபல கார் ரேஸ்சர் கே.இ.குமார் எதிர்பாராத விதமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (8.01.2023) நடந்த நேஷனல் கார் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார், இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற (MRF MMSC FMSCI) இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2022 தொடரில் பங்கேற்ற 59-வயது மிக்க அனுபவ வீரரான கே.இ.குமார் இரண்டாவது சுற்றில் பங்கேற்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த காரில் மோதிய நிலையில் நிலைதடுமாறிய குமாரின் கார் ரேஸ் ட்ராக் விட்டு வெளியேறி அருகில் இருந்த தடுப்பில் மோதி நிலை குலைந்தது.
அதன்பின் போட்டி உடனடியாக நிறுத்த பட்டு அவரை காப்பாற்றி முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டர்,ஆனால் மருத்துவர்கள் பெரிய அளவில் முயன்றும் சிகிச்சை பலனளிக்காததால் குமாரின் உயிர் பிரிந்தது.
அதன்பின் இந்த விபத்து குறித்து பேட்டி அளித்த தொடரின் பொறுப்பாளர் விக்கி சந்தோக் கூறியது,கே.இ.குமார் ஒரு அனுபவம் வாய்ந்த திறமையான வீரர் அவரின் இழப்பு எங்களை பேர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.மேலும் விபத்து எப்படி நிகழ்ந்தது என்று தீவிர விசாரணை நடத்தப்படும் என்றார்.
இந்நிலையில் கே.இ குமாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு, கார் பந்தய வீரர்கள் ,ரசிகர்கள் என அனைவரும் தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.