Hocky News Live: ரெண்டு டைம் தோத்தாலும் மீண்டும் மனவுறுதியுடன் களமிறங்கும் இந்தியா!
Hocky News Live: இரண்டு லெக் எஃப்ஐஎச் புரோ லீக் 2021-22 (FIH Pro Hockey League 2021-22) இந்திய தேசிய ஆடவர் ஹாக்கி அணி புவனேஸ்வரில் அர்ஜென்டினாவை இன்று எதிர்கொள்கிறது. IND vs ARG ஹாக்கி போட்டிகளை எப்படி பார்ப்பது என்பது பற்றிய அனைத்து தகவல்களும் இதோ!
இந்தியா புவனேஸ்வரில் அர்ஜெண்டினாவுக்கு எதிராக இரண்டு லெக் டையுடன் தங்களுடைய FIH புரோ லீக்கை மீண்டும் தொடங்கவுள்ளது. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த இரண்டாவது லெக்கில் ஸ்பெயினிடம் 3-5 என்ற கணக்கில் எஃப்ஐஎச் ப்ரோ லீக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
அதேப்போல், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா கடந்த மாதம் நடந்த பிரான்சுக்கு எதிரான போட்டியில் மற்றுமொரு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், ஆறு போட்டிகளுக்குப் பிறகு கிரஹாம் ரீடின் ஆண்கள் அணி இன்னும் 12 புள்ளிகளுடன் ஒன்பது அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்குமுன், நெதர்லாந்து அணி ஆறு ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் முன்னணியில் உள்ளது. அதேப்போல், அர்ஜென்டினா நான்கு போட்டிகளில் (மூன்று வெற்றி மற்றும் ஒரு தோல்வி) ஒன்பது புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
India Vs Argentina: இந்நிலையில், இரண்டு தோல்விகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் அர்ஜெண்டினாவை எதிர்க்கொள்வதால், ஹாக்கி ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தலைமை பயிர்சியாளர் ரீட், இந்த ஆண்டு காமென்வெல்த் மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதிச் சுற்றை ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக அணியின் தளத்தை விரிவுபடுத்துவதற்காக தனது ரிசர்வ் வீரர்களை தொடர்ந்து சோதித்து வந்தார். இந்நிலையில், இன்று நடக்கும் எஃப்ஐஎச் புரோ லீக்கில்(FIH Pro Hockey League 2021-22) இந்தியா அந்த டெம்ப்ளேட்டை தொடர்ந்து பின்பற்ற போகிறார்கள்.
போட்டி மற்றும் டெலிகாஸ்ட் விவரங்கள் (Hocky News Today)
போட்டி: ஆடவர் எஃப்ஐஎச் புரோ லீக் 2021-22, இந்தியா vs அர்ஜென்டினா
தேதிகள்: மார்ச் 19 (சனி) மற்றும் மார்ச் 20 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: IND vs ARG போட்டிகள் இரண்டும் IST இரவு 7:30 மணிக்கு தொடங்கும்
இடம்: கலிங்கா ஸ்டேடியம், புவனேஸ்வர்
எப்படி பார்ப்பது: IND vs ARG ஹாக்கி போட்டிகள் இரண்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் ரசிகர்கள் போட்டிகளை நேரடியாக ஸ்ட்ரீம் செய்யலாம்.
இந்திய அணி (Indian Hocky Team)
கோல்கீப்பர்ஸ் - பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிரிஷன் பகதூர் பதக்; டிஃபென்டர்ஸ் - ஜுக்ராஜ் சிங், வருண் குமார், ஹர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங்; மிட்ஃபீல்டர்கள் - மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், ஹர்திக் சிங், சுமித், ஷம்ஷேர் சிங், நீலகண்ட சர்மா, மொய்ரங்தெம் ரபிச்சந்திரா; முன்கள வீரர்கள் - மன்தீப் சிங், தில்ப்ரீத் சிங், குர்ஜந்த் சிங், லலித் குமார் உபாத்யாய், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜீத் சிங், அபிஷேக்.
ஸ்டேண்ட்பை: சூரஜ் கர்கேரா, மன்தீப் மோர், டிப்சன் டிர்கி, நிலம் சஞ்சீப் செஸ், சஞ்சய், ஜஸ்கரன் சிங், ஆகாஷ்தீப் சிங், ஆஷிஸ் குமார் டோப்னோ, குர்சாஹிப்ஜித் சிங் முகமது ரஹீல் .