Representative Image.
ஃபிஃபா உலகக்கோப்பை அரங்கில் அனைத்து அணிகளும் தங்கள் முதல் சுற்றின் இறுதிப் போட்டியை விளையாடி வரும் நிலையில், குரூப் -டி பிரிவில் இருக்கும் துனிசியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதினர். கடந்த உலகக்கோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணி இந்த முறையும் சிறப்பாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முதல் அணியாகத் தகுதிபெற்றது. துனிசியா அணியோ இதுவரை இந்த உலகக்கோப்பை அரங்கில் ஒரு கோல் அடிக்காமல் தனது முதல் வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை நோக்கிக் களமிறங்கியது.
இந்த போட்டி தொடங்கியதும் துனிசியா அணியின் வீரர்கள் முழுவீச்சில் பிரான்ஸ் அணியினரை எதிர் கொண்டனர். இதனால் போட்டியின் 8-வது நிமிடத்திலேயே துனிசியா வீரர் வஹ்பி கஸ்ரி அடித்த பிரீ-கிக்கை கோலாக மாற்றினார் நாடர் காந்த்ரி. இருப்பினும் அந்த கோல் ஆப்-சைடு என்று மறுக்கப்பட்டது. பிறகு இரு அணியினரும் தொடர்ந்து கோலுக்கான முயற்சியில் ஈடுபட்டனர். போட்டியின் முதல்பாதி முடிவில் கோல் ஏதும் பதிவாகவில்லை.