ஐபிஎல்லுக்கு அடுத்து இபிஎல்.. முகேஷ் அம்பானியின் பிரமாண்ட திட்டம்?

Representative Image. Representative Image.

By Sekar Published: November 14, 2022 & 14:48 [IST]

Share

ஒரு இழுபறியான ஏலச் சூழ்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, பிரபலமான EPL (ஆங்கில பிரீமியர் லீக்) கிளப்பான லிவர்பூலை, கையகப்படுத்தும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகேஷ் அம்பானி பிரபலமான EPL (ஆங்கில பிரீமியர் லீக்) கிளப்பை அணுகியுள்ளார். ஆனால் அவர் கைப்பற்ற நினைக்கும் லிவர்பூல் கிளப்பை கைப்பற்ற மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்களும் முயற்சிப்பதால் போட்டி கடுமையாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 

லிவர்பூலின் தற்போதைய உரிமையாளர்களான ஃபென்வே ஸ்போர்ட்ஸ் குரூப் பல்வேறு சலுகைகளால் நிரம்பி வழிகிறது. எனினும் முழுமையான விபரங்கள் தற்போதுவரை வெளியாகவில்லை.

முகேஷ் அம்பானி குடும்பம் சந்தேகத்திற்கு இடமின்றி விளையாட்டு வணிகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) தொடரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை சொந்தமாக வைத்துள்ளது. கால்பந்து போட்டிகளுக்கான இந்தியன் சூப்பர் லீக்கை நடத்துகிறார்கள் மற்றும் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் வணிக பார்ட்னராகவும் இருக்கிறார்கள்.

ஆச்சரியப்படும் விதமாக, இதுபோன்ற செய்திகள் வெளிவருவது இது முதல் முறை அல்ல. அவர் 2010 ஆம் ஆண்டில் லிவர்பூலுக்கு ஏலம் எடுக்க முயன்றார். அன்றைக்கு, சுப்ரதா ராய் (சஹாரா குழுமத்தின் உரிமையாளர்) மற்றும் முகேஷ் அம்பானி இருவரும் கிளப்பின் 51% பங்குகளை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியதாகக் கூறப்பட்டது. 

ஆனால், அவற்றின் அப்போதைய உரிமையாளர்களான டாம் ஹிக்ஸ் மற்றும் ஜார்ஜ் கில்லெட் ஆகியோரிடமிருந்து பங்குகள், எஃப்எஸ்ஜி (ஃபென்வே ஸ்போர்ட்ஸ் குரூப்) நிறுவனத்திடம் சென்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் இதேபோன்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது.