FIFA World Cup 2022 : உருகுவே-தென்கொரியா இடையேயான போட்டியும் டிரா!!

FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை 2022-ல் குரூப்-H பிரிவின் முதல் போட்டியில் உருகுவே மற்றும் தென்கொரியா அணிகள் அல் ரியானில் உள்ள மைதானத்தில் மோதின. உலகக்கோப்பை அரங்கில் பலபோட்டிகளின் முடிவுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்ததாலும், உலகத்தரவரிசையில் டாப்பில் இருக்கும் அணிகளும் தோல்வியை சந்தித்துள்ளன.
எனவே உருகுவே மற்றும் தென்கொரியா அணிகளுக்கு இடையே ஆன போட்டியை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த போட்டியும் கோல் ஏதும் பதிவாகாமல் டிராவில் முடிந்தது.
இரு அணிகளுக்கு இடையே போட்டி தொடங்கிய உடனே தென்கொரியாவின் நட்சத்திர வீரர் சன் ஹியுங்-மின் தனது சிறந்த ஆட்டத்தை உருகுவே அணிக்கு எதிராக வெளிப்படுத்தினார். உருகுவே அணி வீரர்களும் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்திய போதிலும், அவர்ளுக்கு கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறிவிட்டனர்.
குறிப்பாக உருகுவே அணியின் வீரர்கள் மத்தியாஸ் மற்றும் பெடரிகோ கோலுக்கான வாய்ப்பை இழந்தனர். இந்த போட்டியின் இறுதி வரை கோல் ஏதும் பதிவாகாததால் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து இருஅணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன
உலககோப்பையில் முக்கிய அணிகளான அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் தோல்வியை தழுவிய நிலையில், உருகுவே மற்றும் தென்கொரியா அணிகளின் போட்டி டிராவில் முடிந்து அவர்கள் புள்ளிப் பட்டியலில் மேலே இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே உலகக்கோப்பையில் இனிவரும் போட்டிகள் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.