FIFA World Cup 2022 : கேமரூனுக்கு எதிரா போட்டியில் சுவிட்சர்லாந்தின் வெற்றிக்கு உதவிய கேமரூன் வீரர்!!
FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பையில் இன்றைய முதல் ஆட்டத்தில் குரூப்-G பிரிவில் இருக்கும் சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகள், அல்கோரில் உள்ள அல் ஜனோப் மைதானத்தில் மோதினார்கள். உலக கால்பந்து அணிகள் தரவரிசையில் சுவிட்சர்லாந்துஅணி 15-வது இடத்திலும் கேமரூன் அணி 43-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரிவில் உலகத்தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பிரேசில் அணியும் இடம்பெற்றுள்ளது. எனவே இப்பிரிவில் உள்ள அனைத்து போட்டிகளின் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. மேலும் இந்த போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் தங்கள் அணிக்கு புள்ளிபட்டியலில் முதல் இடம் கிடைக்கும் வாய்ப்பும் அடுத்ததாக தங்கள் பிரிவில் முதல் இரு இடங்களை பிடிப்பதற்கு இந்த போட்டி மிகவும் முக்கியம் என்று இருஅணிகளும் உணர்ந்து போட்டியில் முழுவீச்சில் விளையாடினார்கள்.
சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் போட்டி தொடங்கியது முதல் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கேமரூன் அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சுவிட்சர்லாந்து அணி வீரர் மானுவல் அகன்ஜி தனது அணிக்கான கோல் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்த ஆட்டத்தின் முதல் பாதிவரை சுவிட்சர்லாந்து அணியின் கோல்கீப்பர் யான் சோமர் கேமரூன் வீரர்களுக்கு கோலுக்கான எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை. தனது பணியை சிறப்பாக செய்தார் என்றே கூறலாம்.
இந்நிலையில், இந்த போட்டியின் இரண்டாவது பாதி ஆரமித்த சில நிமிடங்களிலேயே சுவிட்சர்லாந்து அணி வீரர் ப்ரீல் எம்போலோ தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். இவர் கேமரூன் நாட்டில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேமரூன் அணி வீரர்கள் தங்கள் அணிக்கான கோலுக்காக பலவகையில் முயன்றும் சுவிட்சர்லாந்து அணியின் சிறந்த ஆட்டத்தினால் அனைத்தும் முறியடிக்கப்பட்டது.
எனவே இந்த போட்டியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றிபெற்றது. இந்த உலகக்கோப்பை அரங்கில் மேலும் ஒரு புதிய நிகழ்வாக கேமரூன் நாட்டில் பிறந்த வீரர் அடித்த கோலால் சுவிட்சர்லாந்து அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.