FIFA World Cup 2022 : இந்த உலகக்கோப்பையில் நாங்க தான் கில்லி.. சொல்லி அடித்த ஸ்பெயின்!!

FIFA World Cup 2022 : உலகக்கோப்பையில் குரூப் -இ பிரிவின் மற்றும் ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் கோஸ்ட்டா ரிக்கா அணிகள் அல் துமாமா மைதானத்தில் நேற்று மோதின.
இந்த 2022 பிபா தொடரில் உலகின் முக்கிய அணிகள் எல்லாம் சொதப்பி வந்த நிலையில் ஸ்பெயின் அணி எங்க ஆட்டம் வேறமாறி என்பதற்கு எடுத்துக்காட்டாக நேற்றைய போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் கோஸ்ட்டா ரிக்கா அணியை துவம்சம் செய்தது.
இந்த போட்டி தொடங்கியது முதலே தங்கள் ஆதிகத்தை செலுத்திய ஸ்பெயின் அணி வீரர்கள் டானி ஓல்மோ,மார்கோ அசென்சியோ மற்றும் ஃபெரான் டோரஸ் தலா ஒரு கோல்களை அடித்து போட்டியின் பாதி நேரமுடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை முன்னிலை பெறச் செய்தனர்.
பிறகு போட்டியின் இரண்டாவது பாதியிலும் ஸ்பெயின் தனது கோல் கணக்கை தொடர்ந்தது. ஸ்பெயின் வீரர் டோரஸ் தனது இரண்டாவது கோலை அடித்தார். பின்பு ஸ்பெயின் அணியின் இளம் வீரரான கவி தனது முதல் கோலை ஸ்பெயின் அணிக்காக பதிவு செய்தார். மேலும் கார்லோஸ் சோலர் மற்றும் அல்வாரோ மொராட்டாதலா ஒரு கோல்களை அடித்தனர்.
இதன் மூலம் ஸ்பெயின் அணி 7-0 என்ற கோல்கணக்கில் கோஸ்ட்டா ரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முடிவு ஆச்சிரியத்தை அளிக்கவில்லை என்றாலும் ஸ்பெயின் அணி இந்த வெற்றியின் மூலம் மற்ற அணிகளுக்கு ஒரு தகவலை அனுப்பியதாகவே கருதப்படுகிறது.
மேலும் ஸ்பெயின் அணி அடுத்த போட்டியில் தனது பிரிவில் இருக்கும் ஜெர்மனி அணியை சந்திக்க உள்ளது.
இந்த போட்டி 2022 உலகக்கோப்பை தொடரில் முக்கிய போட்டியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. முன்னதாக 2010 உலகக்கோப்பையை ஸ்பெயின் அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.