பிபா உலகக்கோப்பை 2022 தொடரின் முதல் "டிரா மேட்ச்" பதிவானது.. அதுவும் இந்த அணி விளையாடும் போதா..?

Representative Image. Representative Image.

By Sekar Published: November 22, 2022 & 17:30 [IST]

Share

உலகக்கோப்பையின் "குரூப் ஆப் டெத் " பிரிவு

உலகக்கோப்பை பிரிவில் உள்ள குரூப் -பி பிரிவையே "குரூப் -ஆப்- டெத் " பிரிவு என்று அழைகிறார்கள். இதற்கான காரணமாக கூறுப்படுவது அந்த பிரிவில் உள்ள இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் அணிகள், சர்வதேச அளவில் சிறந்த அணிகளாக  விளங்குவதும் மேலும் அந்த பிரிவில் உள்ள ஈரான் மற்றும் அமெரிக்கா, ஈரான் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் விரோதமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 

எனவே  இந்த அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டிகள் அதிக எதிர்பார்ப்பைக்  கொண்டுள்ளது. நேற்றைய ஒரு போட்டியில் இந்த பிரிவில் உள்ள  இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் மோதினார்கள். அதில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி ஈரான் அணியை 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.

அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகள் பலப்பரிட்சை

குரூப்-பி பிரிவின் இரண்டாவது போட்டியில் அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகள் அல் ரய்யான் மைதானத்தில்  மோதின.  இந்தப் போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனால் ஆட்டத்தின்  36-வது நிமிடத்தில் அமெரிக்கா அணி வீரரான "திமோதி வெயா" தன் அணிக்கான முதல் கோலைப்  பதிவுசெய்தார். இதன் மூலம் அமெரிக்கா அணி ஆட்டத்தில் முன்னிலை வகித்தது.

பின்பு ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் வேல்ஸ் அணி வீரர்கள்  கோல் அடிக்கும் முனைப்பில் திறமையாக விளையாடினார்கள். அதற்கு பலனாக ஆட்டத்தின் 82-ஆவது நிமிடத்தில் தன் அணிக்கான பெனாலிட்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வேல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்  "கரேத் பேல்" கோலை அடித்தார் இதன்மூலம் அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகள் தலா ஒரு புள்ளிகளைப் பெற்று நேற்றைய போட்டி டிராவில் முடிந்தது. இறுதி நேரத்தில் தோல்வி நிலையில் இருந்த தான் அணியை சரியான நேரத்தில் காப்பாற்றி வேல்ஸ் அணியின் ரசிகர்கள் இடையே  ஹீரோ ஆனார் அந்த அணியின் வீரர் "கரேத் பேல்" .பிபா 2022 உலகக்கோப்பையின் முதல் டிரா போட்டியாக நேற்றைய போட்டிப்  பதிவானது.