Representative Image.
FIFA World Cup 2022 Iran vs Wales : உலகக்கோப்பையின் குரூப்-பி பிரிவில் உள்ள வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகள் தங்கள் இரண்டாவது போட்டியை அகமது பால் அலி மைதானத்தில் விளையாடினார்கள். வேல்ஸ் அணி தனது முதல் போட்டியில் அமெரிக்கா அணிக்கு எதிராக விளையாடி போட்டியை டிராவில் முடித்து தனது பிரிவில் ஒரு புள்ளியுடன் உள்ளது.
அடுத்தாக ஈரான் அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதி தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்போடு வேல்ஸ் அணியைச் சந்தித்தது. மாறாகத் தோல்வி அடைந்தால் ஈரான் அணியின் உலகக்கோப்பை கனவு இந்த போட்டியோடு
கலைந்துவிடும் என்ற நெருக்கடியான நிலை நிலவியது.
உலகக்கோப்பையின் முதல் ரெட்கார்டு வழங்கப்பட்டது:
இந்த போட்டியின் தொடக்கத்திலிருந்தே வேல்ஸ் மற்றும் ஈரான் அணி வீரர்கள் தங்கள் முழுத்திறமையுடன்
ஆட்டத்தை ஆடினார்கள். வேல்ஸ் அணி வீரர் கரேத் பேல் கோல் அடிக்கும் வகையில் எடுத்த அனைத்து முயற்சிகளும் ஈரான் வீரர்களால் முறியடிக்கப்பட்டது. இதனால் கோல் ஏதும் அடிக்காமலேயே போட்டியின் பாதி நேரம் முடிந்தது.
போட்டியின் இரண்டாவது பாதியில் முழு வேகத்துடன் கோலை நோக்கி இருஅணிகளும் விளையாடினார்கள். அப்போது ஆட்டத்தின் நடுவில் வேல்ஸ் அணியின் கோல்கீப்பர் வெய்ன் ஹென்னெஸ்ஸி செய்த தவறால் அவருக்கு ரெட்கார்ட் வழங்கப்பட்டது. இதனால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்குப் பதிலாக டேனி வார்டு புதிய கோல்கீப்பராக போட்டியின் உள்ளே வந்தார்.
வேல்ஸ் வீரர் ஹென்னெஸ்ஸி தான் இந்த உலகக்கோப்பையில் ரெட்கார்டு வழங்கப்பட்ட முதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி நேர திக் திக் ஆட்டம் :
இந்த போட்டியின் நேரம் முடிந்து கூடுதல் ஒன்பது நிமிடங்கள் கொடுக்கப் பட்டன. அதுவரை எந்த கோல்களும் பதிவாகவில்லை. இந்த நிலையில் வேல்ஸ் அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஈரான் வீரர்கள் ரூஸ்பே செஸ்மியும் ராமின் ரெசையனும் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்தார்கள். இதனால் போட்டியின் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணி வேல்ஸ் அணியை வென்றது.
மேலும் ஈரான் அணி முதல்முறையாக உலகக்கோப்பையில் அடுத்தகட்ட ஆட்டத்திற்குத் தகுதி பெரும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. பிபா உலகக்கோப்பை 2022 ஒரு சிறப்பான நிகழ்வாக ஈரான் அணியின் வெற்றி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.