பிபா 2022 : வீழ்ந்தது மொரோக்கோ.. இறுதிப் போட்டிக்குள் அசால்டாக அடியெடுத்து வைத்த பிரான்ஸ்!!

FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை 2022 தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதின. இதில் மொரோக்கோ அணியை வீழ்த்தி பிரான்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியின் தொடக்கத்தில் கால்பந்து ரசிகர்களின் கூற்றுப்படி கடந்த உலகக்கோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணிக்குப் போட்டியில் வெல்ல அதிக வாய்ப்பு இருந்தாலும், இந்த தொடரில் இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய மொரோக்கோ அணி கண்டிப்பாக முழுமுயற்சியுடன் பிரான்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், போட்டி தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே பிரான்ஸ் அணியின் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் தனது முதல் கோலை அடித்து ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை முன்னிலை பெறச் செய்தார், இதனைச் சற்றும் எதிர்பாராத மொரோக்கோ அணி தங்கள் அணிக்குக் கோல் அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் போட்டியில் முழுவீச்சில் இறங்கி விளையாடினார்கள். மொரோக்கோ அணியின் ஹக்கிமி கோல் அடிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் ஏதும் பலனளிக்காத நிலையில் முதல் பாதியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி முன்னிலையிலிருந்தது.
அடுத்தாக போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியதும் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே மற்றும் மொரோக்கோவின் ஹக்கிமி இருவருக்கும் இடையில் தங்கள் அணிக்காகச் சிறந்த நிலவியது,மேலும் இருஅணிகளும் தங்கள் அணியின் நிலையை மேம்படுத்தி கோல் அடிக்கும் முனைப்பில் மாற்று வீரர்களைப் போட்டியில் இறக்கிக் கொண்டு இருந்தனர். இந்நிலையில், போட்டியின் 79-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் வீரர் டெம்பலே பதிலாக உள்ளே வந்த வீரர் கோலோ முவானி சிறப்பாகச் செயல்பட்டு தங்கள் அணியின் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே பாஸ் செய்த பந்தை வாங்கி அழகாகக் கோலாக மாற்றினார்.
அதன்பின், இறுதிவரை மொரோக்கோ அணியின் சார்பில் கோல் எதும் அடிக்கப்படாத நிலையில் பிரான்ஸ் வீரர்கள் தியோ ஹெர்னாண்டஸ், கோலோ முவானி ஆகியோர் அடித்த கோலிகளின் மூலம் 2-0 என்ற அடிப்படையில் மொரோக்கோ அணியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி.
இந்த உலகக்கோப்பை தொடரில் பல அற்புதங்களை நிகழ்த்தி அரையிறுதி வரை வந்த மொரோக்கோ அணியின் பயணம் முடிவடைந்தது. மேலும் கடந்த உலகக்கோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணி இந்த முறையும் தொடர்ச்சியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி மாஸ் காட்டியது. பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியோடு மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.