மண்ணைக் கவ்விய ஆஸ்திரேலியா.. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அபார வெற்றி!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 23, 2022 & 13:53 [IST]

Share

FIFA World Cup 2022 : பிபா 2022 உலககோப்பை தொடரின் மற்றும் ஒரு முக்கியமான போட்டியாக பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன போட்டி எதிர்பாக்கப்பட்டது. 

கடந்த 2018 உலககோப்பையின் சாம்பியன்ஸ் ஆனா பிரான்ஸ் அணி இந்த உலகக்கோப்பை தொடரை எப்படி எதிர்கொள்ளும் என்ற யோசனை தான் ரசிகர்கள் இடையே இந்த போட்டிக்கான ஆர்வத்தை  தூண்டியது. அந்த எதிர்பார்ப்பிற்கு மகிழ்ச்சியைத்  தருவதைப் போல் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது.  

ஆரம்பித்த ஆஸ்திரேலியா - முடிவுகட்டிய பிரான்ஸ் :

பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி அல் ஜனோப் மைதானத்தில் தொடங்கியது .போட்டியை பிரான்ஸ் அணி சிறப்பாக தொடங்கிய நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியா அணியின் கிரேக் குட்வின் ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் தன் அணிக்கான முதல் கோலை அடித்தார். 

பிறகு களத்தில் முழுவீச்சில் இறங்கிய பிரான்ஸ் அணியின் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். அதன் மூலம் ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் அட்ரியன் ராபியோட் பிரான்ஸ் அணிக்கான முதல் கோலை அடித்தார். பிறகு பிரான்ஸ் அணிக்கான அடுத்த கோலை ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் ஆலிவர் ஜிரோட் கோல் அடித்து தன் அணியை முன்னிலை அடையச்  செய்தார். 

போட்டியின் இரண்டாவது பாதியில் 68-வது நிமிடத்தில்  பிரான்ஸ் அணி வீரர் கைலியன் எம்பாப்பே தன் பங்கிற்கு ஒரு கோலை அடித்தார். இறுதியாக ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் மறுபடியும் தனது சிறப்பான ஆட்டத்தினால் ஆலிவர் ஜிரோட் தனது இரண்டாவது கோலை அடித்தார்.

இதன்மூலம் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி குரூப்-டி பிரிவில் முதல் இடத்தை அடைந்தது. மேலும் ஆலிவர் ஜிரோட் தனது இரு கோல்கள் மூலம் பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள்  அடித்தவர் பட்டியலில் தியரி ஹென்றியை சமன் செய்தார்.