Representative Image.
FIFA World Cup 2022 ENG vs USA : பிபா உலகக்கோப்பை 2022 குரூப்-பி பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் தங்களது இரண்டாவது போட்டியை அல் பேட் மைதானத்தில் விளையாடின. போட்டியின் முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதையடுத்து தற்போதைய நிலையில் குரூப்-பி பிரிவில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், ஈரான் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
முன்னதாக, உலக கால்பந்து அணிகள் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி பதினாறாவது இடத்தில் இருக்கும் அமெரிக்கா அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடும் என்ற எதிர்பார்ப்புடன் போட்டி தொடங்கியது. இந்த போட்டியின் தொடக்கத்தின் முதலே இங்கிலாந்து அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்கு எதிராக அமெரிக்கா அணி வீரர்களும் விளையாடினார்கள்.
இங்கிலாந்து அணி வீரர் கேன் கோலுக்கான வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டார். மேலும் அமெரிக்கா அணி வீரர் டர்னர் தனது சிறப்பான ஆட்டத்தினால் இங்கிலாந்து அணி வீரர்களை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் பாதி கோல் ஏதும் பதிவாகாமல் முடிந்தது.
இந்த போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் தங்கள் அணியின் கோலுக்காக முழுவீச்சில் செயல்பட்டார்கள். அமெரிக்காவின் டர்னர் தனது சிறப்பான ஆட்டத்தினால் இங்கிலாந்து அணி வீரர்களின் கோல் வாய்ப்புகளை முறியடித்தார். போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி வீரர் கேன் மற்றொரு கோல் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் ஆட்டத்தின் முடிவு டிராவாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்டன. இந்த போட்டி டிராவில் முடிந்ததால், அமெரிக்க அணியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் கனவு ஊசலாட்டத்தில் உள்ளது.