Representative Image.
FIFA World Cup 2022 : உலகக்கோப்பை நேற்றைய ஆட்டத்தில் குரூப்-இ பிரிவில் கோஸ்டா ரிகா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. கோஸ்டா ரிகா அணி தனது முதல் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் படு தோல்வியடைந்தது.
மேலும் ஜப்பான் அணி தனது முதல் போட்டியில் ஜெர்மனி அணியைத் தோற்கடித்து உலகக்கோப்பை அரங்கில் மாஸ் காட்டியது. இந்நிலையில் தனது முதல் வெற்றிக்காக கோஸ்டா ரிகா அணியும் தனது அடுத்த வெற்றிக்காக ஜப்பான் அணியும் அகமது பின் அலி மைதானத்தில் விளையாடின.
இந்த போட்டி தொடங்கியது முதல் கோஸ்டா ரிகா அணி வீரர்கள் தங்கள் அணிக்கான முதல் கோல் வாய்ப்பை நோக்கி விளையாடினார்கள். அதற்கு இணையாக ஜப்பான் அணி வீரர்களும் தங்கள் முழுப் பங்களிப்பை அளித்து சமமாக விளையாடினார்கள். இதனால் போட்டியின் முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.
கோஸ்டா ரிகா அணி வீரர்கள் போட்டியின் இரண்டாவது பாதியில் தங்கள் சிறப்பான ஆட்டத்தினால் ஜப்பான் அணியை மிரள வைத்தனர். இதன் விளைவாகப் போட்டியின் 81-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகாவின் கீஷர் புல்லர் தனது அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இறுதிவரை ஜப்பான் அணி கோல் ஏதும் அடிக்காததால் கோஸ்டா ரிகா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வென்றது.
இந்த போட்டியின் முடிவில் குரூப்-எப் பிரிவில் ஜெர்மனி அணி கடைசி இடத்திலும், ஸ்பெயின் அணி முதல் இடத்திலும் கோஸ்டா ரிகா அணி நான்காவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.