உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி வெற்றி.. மெஸ்ஸி இருக்கும் போது தோக்க முடியுமா..?

Representative Image. Representative Image.

By Sekar Published: November 22, 2022 & 19:00 [IST]

Share

குரூப் -சி பிரிவின் முதல் சுற்று

பிபா 2022 உலகக்கோப்பை கத்தாரில் ஆரமித்து இதுவரை குரூப்-எ மற்றும் குரூப்-பி பிரிவில் இருந்த அணிகள் மோதியது. இன்றைய ஆட்டத்தில் குரூப்-சி  பிரிவின் முதல் போட்டியாக இதுவரை இருமுறை (1978,1986) பிபா உலகக்கோப்பை வென்றுள்ள அர்ஜென்டினா அணியும் ஒருமுறை கூட உலகக்கோப்பையை  வெற்றி பெறாத  சவூதி அரேபியா அணியும் லுசைல் மைதானத்தில் விளையாடினார்கள். சவூதி அரேபியா அணியும் உலகக்கோப்பை அரங்கில்  பெரிதாக இதுவரை சாதிக்கவில்லை என்றாலும் தனது நிலையை மாற்ற முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜென்டினா அணி கடைசியாக 1986-இல்  "மாரடோனா" தலைமையில் உலகக்கோப்பையை  வென்றது, 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தமுறை உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆடும் என்று எதிர்பாக்கப்பட்டது .  

அர்ஜென்டினா அணியின் நாயகன் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான  "லியோனல் மெஸ்ஸி" கால்பந்து உலகில் தலைச் சிறந்த வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, இவர் இதுவரை (2006, 2010, 2014 & 2018).நான்கு உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார் ஆனால் ஒருமுறை கூட  தனது அணிக்காக உலககோப்பையை வாங்கி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இத்தகைய எதிர்பார்ப்பு  லியோனல் மெஸ்ஸியின் மீது இருப்பதற்கான காரணம் அவர் கால்பந்து உலகின் தலைசிறந்த விருதான "பலோன் டி'ஓர்" விருதினை இதுவரை 7 முறை வென்றுள்ளார்  , மேலும் 35 வயதான மெஸ்ஸி விளையாடும் கடைசி உலககோப்பையாக கூட இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது எனவே அவர் செல்லும் முன்னர் பிபா உலககோப்பையை தனது  அர்ஜென்டினா அணிக்கு பெற்றுத்தர முயற்சிப்பார் என்று நம்பப்படுகிறது. 

குரூப்-சி பிரிவின்  போட்டி தொடங்கிய 10 -வது நிமிடத்திலேயே பெனாலிட்டி முறையில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த வாய்ப்பை  தங்கள் அணியின் கோலாக மாற்றினார்  நட்சத்திர வீரர் "லியோனல் மெஸ்ஸி".

பிறகு அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த மூன்று கோல் வாய்ப்புகளும் ஆப் -சைடு முறையில் நிராகரிக்கபட்டது ,போட்டியின் பாதி நேரப் பகுதிவரை மெஸ்ஸி அடித்த ஒரு கோலின் மூலம்    அர்ஜென்டினா அணி முன்னிலை வகித்தது.

சவூதி அரேபியாவின் ஆதிக்கம்

இந்த போட்டியின் இரண்டாவது பாதி நேரம் தொடங்கிய 48-வது நிமிடத்தில்  சவூதி அரேபியாவின் "சலே அல் ஷெஹ்ரி" தன் அணியின் முதல் கோலை அடித்து அர்ஜென்டினா அணியுடன்  சமன் செய்தார். அதிர்ச்சியில் இருந்த  அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு மேலும் ஒரு இடியாக போட்டியின் 53வது நிமிடத்தில்  சவூதி அரேபியா வீரர் "அல் தவ்சாரி" ஒரு கோலை அடித்து சவூதி அரேபிய அணியை முன்னிலை பெறச் செய்தார்.

பிறகு அர்ஜென்டினா அணி வீரர்கள் ஒரு கோலுக்கான வாய்ப்பை தேடி பலவகையில் முயன்றனர், ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக்கிற்கான  வாய்ப்பு கிடைத்தும்  அர்ஜென்டினா அணியின் முக்கிய வீரரான மெஸ்ஸி அதை தவறிவிட்டார். இதனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிபா உலகக்கோப்பை தொடரில் குரூப்-சி  பிரிவில் அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில்  வீழ்த்தி சவூதி அரேபியா அணி வெற்றியை கைப்பற்றியது உலகக்கோப்பை தொடரில் "எதிர்பாராததை எதிர்பாருங்கள் " என்பதை போல அர்ஜென்டினா அணியின் தோல்வி அமைந்துள்ளது.