கால்பந்து உலகக்கோப்பையில் இங்கிலாந்து ஆதிக்கம்..! ஈரானை சாய்த்தது..!

குரூப் ஆப் டெத்:
பிபா 2022 உலகக்கோப்பை கத்தாரில் நடந்து வருகிறது, இந்த தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் குரூப்-பி பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் கலீஃபா சர்வதேச அரங்கத்தில் மோதின. "குரூப் ஆப் டெத்" என்று அழைக்கப்படும் இந்த பிரிவில் உள்ள அணிகள் இங்கிலாந்து, அமெரிக்க, வேல்ஸ் மற்றும் ஈரான். இந்த அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளைக் காண அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
இளம் இங்கிலாந்து அசத்தல் :
உலகக்கோப்பையின் இரண்டாவது போட்டியில் 6-2 என்ற கோல்கள் கணக்கில் ஈரான் அணியை தோற்கடித்து பெரும் வெற்றியைப் பெற்றது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது,ஆட்டத்தின் முதல் பாதியிலேயே மூன்று கோல்களை அடித்து முன்னிலை வகித்தது . இங்கிலாந்து அணியின் இளம் வீரரான "ஜூட் பெல்லிங்ஹாம்" தனது அணிக்கான முதல் கோலை ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அடித்தார்.
மேலும் மற்றொரு இளம் வீரரான "புகாயோ சாகா" தனது கோலை அடித்தார் .அடுத்ததாக "ரஹீம் ஸ்டெர்லிங்" இங்கிலாந்து அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார் .பிறகு ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் சாகா தனது இரண்டாவது கோலை அடித்தார் இதன்மூலம் தொடரின் முதல் போட்டியில் இரண்டு கோல்களை அடித்த இரண்டாவது இளம்வீரர் என்ற பட்டியலில் இணைந்தார்.
ஈரான் முயற்சி தோல்வியில் முடிந்தது :
ஈரான் அணி வீரர்கள் போட்டியின் தொடக்கத்திலிருந்தே தங்கள் அணிக்காக முதல் கோலை அடிக்க போராடினார்கள் ,இறுதியாக ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஈரான் அணியின் வீரர் "மெஹ்தி தரேமி" தனது அணிக்கான முதல் கோலை அடித்தார் .இதற்கு இடையில் இங்கிலாந்து அணி வீரர்கள் "மார்கஸ் ராஷ்ஃபோர்ட்" மற்றும் "ஜாக் கிரேலிஷ்" தலா ஒரு கோல்களை அடித்து தங்கள் அணியை 6-1 என்று முன்னிலை அடைய வைத்தனர். இதற்கு இடையில் ஈரான் அணி வீரர் "மெஹ்தி தாரேம்" தனது அணிக்கான பெனாலிட்டி வாய்ப்பின் மூலம் மற்றும் ஒரு கோலை அடித்தார் இறுதியாக இங்கிலாந்து அணி தனது முதல் மாபெரும் வெற்றியை இளம் வீரர்கள் மூலமே உலகக்கோப்பை அரங்கில் எளிதில் பெற்றது .இதேபோல் வரவிருக்கும் நாட்களில் இங்கிலாந்து அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .