கிறிஸ்டியானா ரொனால்டோ திடீர் விலகல்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பியர்ஸ் மோர்கனுடனான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பரபரப்பான நேர்காணலைத் தொடர்ந்து பல ஊகங்களுக்குப் பிறகு, மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப், பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் போர்த்துகீசிய வீரர் ரொனால்டோ உடனடியாக கிளப்பை விட்டு வெளியேறுவார் என்பதை உறுதிப்படுத்தியது.
முன்னதாக நேர்காணலில், 37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் மற்றும் பயிற்சியாளர் எரிக் டென் ஹாக்கை விமர்சித்து சில சர்ச்சையான கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதையடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு :-
கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு உடனடியாக வெளியேறுகிறார். ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 போட்டிகளில் 145 கோல்களை அடித்த அவரது மகத்தான பங்களிப்பிற்காக கிளப் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறக்க நல்வாழ்த்துக்கள்.
மான்செஸ்டர் யுனைடெட்டில் உள்ள அனைவரும் எரிக் டென் ஹாக்கின் கீழ் அணியின் முன்னேற்றத்தைத் தொடர்வதிலும், ஆடுகளத்தில் வெற்றியை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.