போலந்து அணியைப் பொலந்து கட்டிய அர்ஜென்டினா அணி..,,

Representative Image. Representative Image.

By Editorial Desk Published: December 01, 2022 & 14:00 [IST]

Share

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முக்கிய போட்டியாக குரூப்-சி பிரிவில் போலந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதும் போட்டி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. குரூப்-சி பிரிவில் போலந்து அணி நான்கு புள்ளிகளுடன் முதலிடத்திலும் அர்ஜென்டினா அணி கடைசி போட்டியின் வெற்றியின் மூலம் மூன்று புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி தான் அடுத்த சுற்றுக்குச் செல்லும் என்ற எதிர்பார்ப்புடன் மைதானம் 974-ரில் போட்டி தொடங்கியது.  

இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி அனைத்து எதிர்பார்ப்பும் பொறுப்பும் அந்த அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரரான "லியோனல் மெஸ்சி" மீது தான் தொடக்கத்திலிருந்தே இருந்தது. போலந்து அணியும் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், மெஸ்சி தனது பெனாலிட்டி வாய்ப்பை கோலாக மாற்றத் தவறினார். இதன் அனைத்து பெருமையும் போலந்து அணியின் கோல்கீப்பர் வோஜ்செயிச் சிஸ்ஸிஸ்எஸ்னி தான் சேரும். இதனால் போட்டியின் முதல் பாதி கோல் ஏதும் பதிவாகாமல்  முடிவுக்கு வந்தது.

 

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது அர்ஜென்டினா அணியின் வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் போட்டியின் 46-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார். இதன்மூலம் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது. பிறகு போட்டியின் 67-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோலை அடித்து தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இறுதிவரை போலந்து அணிவீரர்கள் கோல் ஏதும் அடிக்காத நிலையில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று  அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.