Representative Image.
மெல்போர்னில் நடந்த பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இன்று தென்னாப்பிரிக்கா அணியை இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நடந்துகொண்டிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அவர்களின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகளைத் தடுத்துவிட்டது. இது இந்தியாவுக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டி வாய்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது தோல்வி இந்தியாவுக்கு எப்படி உதவியது?
ஆஸ்திரேலியாவில் தென்னாப்பிரிக்கா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதே நேரத்தில் இந்தியா வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இரண்டு தொடர்களுக்கு முன்பு, இந்தியா 52.08% பிசிடியுடன் நான்காவது இடத்தில் இருந்தது.
அதே சமயம் தென்னாப்பிரிக்கா 60% பிசிடியுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் இந்தியாவின் வெற்றிகள் மற்றும் தென்னாப்பிரிக்காவின் தோல்விகள் டீம் இந்தியாவை 58.93% பிசிடியுடன் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளன. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா இப்போது 50% பிசிடியுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு, இந்தியா 55.77% பிசிடியுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவின் தோல்வி அவர்களை 54.55% பிசிடியாக இறக்கியது. இது இந்திய அணியை இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியது.
இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் வெற்றி அவர்களை 55.77% பிசிடியிலிருந்து 58.93% பிசிடி ஆகக் கொண்டு சென்றது. அதே சமயம் இன்று இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்காவின் தோல்வி, அவர்களை 50% பிசிடி ஆக மேலும் குறைத்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா?
இதற்கிடையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியை எட்டும் விளிம்பில் உள்ளது. அவர்கள் 78.57% பிசிடியுடன் தரவரிசையில் தங்கள் முதலிடத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். டீன் எல்கரின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் அவர்களுக்கு எதிராக மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்பு?
நடந்துகொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 சுழற்சியில், இந்தியா நான்கு டெஸ்ட்களிலும், ஆஸ்திரேலியா ஐந்திலும் விளையாடும். அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா இப்போது மேலும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இந்தத் தொடர் முக்கியமானதாக உள்ளது. இதில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் நிச்சயம் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இதற்கிடையில், ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. மேலும் ஒரு வெற்றி அவர்களின் இறுதிப்போட்டியை உறுதி செய்துவிடும்.
தென்னாப்பிரிக்கா இப்போது எஞ்சியிருக்கும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் எனக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் முடிந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.