Representative Image.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் தொடரை முதல் இரண்டு போட்டிகளின் தோல்வியின் மூலம் இழந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் அந்த அணிக்கு எதிராக 7-டி 20 போட்டிகள் மற்றும் 3-டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை 4-3 என்ற நிலையில் இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக விளையாடிய டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணிக்கு முன்னதாகவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தற்போதைய நிலவரப்படி இறுதி போட்டிக்கு முன்னரே அதிக வாய்ப்புகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகள் பின்வருமாறு,
1.ஆஸ்திரேலியா அணி - 75% வாய்ப்பு
2.தென்னாப்பிரிக்கா அணி - 60% வாய்ப்பு
3.இலங்கை அணி - 53.33% வாய்ப்பு
4.இந்தியா அணி - 52.08% வாய்ப்பு
இந்த தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இன்னும் 6-டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. குறிப்பாக வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் அடுத்தாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4-டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. இந்த 6-டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கண்டிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரு அணிகளில் ஒரு அணியாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
அதேபோல் 6 டெஸ்ட் போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுகள் வரும் வரை இந்திய அணியின் நிலை உறுதியாகாது. அதாவது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 3-டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாட உள்ளது. அந்த போட்டியின் முடிவை நோக்கி இந்திய அணி காத்திருக்க வேண்டும்.
மேலும் இந்த தொடரில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி அடுத்து வரும் போட்டிகளில் ஒன்றில் தோல்வியடைந்தால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தானாக வெளியேறிவிடும். இந்நிலையில் இந்திய அணிக்கு உதவும் விதமாக பாகிஸ்தான் அணி தனது தொடர் தோல்விகளால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிபிலிருந்து வெளியேறி இந்திய அணி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.