WTC 2021-2023 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் நிலை..!! இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு..??

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் நிலை மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புகள் குறித்து காண்போம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்திய இந்திய அணி 3 வது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வி அடைந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.
அதாவது இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது நடந்து முடிந்த 3 வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்து நடைபெற உள்ள கடைசி மற்றும் 4 வது டெஸ்ட் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்க வேண்டிய அவசியத்தில் இந்திய அணி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் தற்போதைய நிலையில் முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி 18 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வெற்றி பெற்று 68.52 வெற்றி சதவீதத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது, அதே சமயத்தில் இந்திய அணி 3 வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் வெற்றி சதவீதம் 64.06 இருந்து குறைந்து 60.29 ஆக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் பட்டியலில் 3 வது இடத்தில் 53..33 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணிக்கு போட்டியாக இலங்கை அணி உள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பில் பெரிய சிக்கல் உள்ளது.
அதாவது அடுத்து இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் 2-0 என்ற நிலையில் இலங்கை அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் இந்திய அணியை பொறுத்தவரை 4 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் பார்டர் கவாஸ்கர் தொடரை 3-1 என்ற நிலையில் கைப்பற்றி, 62.5 வெற்றி சதவீதத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால், 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் என்பதால், இறுதி டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.