WOMEN IPL 2023 : மகளிர் பிரீமியர் லீக் தொடரின் போட்டிகள் குறித்த விவரங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது…!!

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் முதல் முறையாக நடத்தப்பட உள்ள மகளிர் ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த தொடருக்கான ஏலம் அண்மையில் மும்பையில் நடைபெற்று முடிந்த நிலையில் போட்டிகள் குறித்த விவரங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
மகளிர் கிரிக்கெட் விளையாட்டை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் உலக அளவில் பல தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடரை இந்த ஆண்டு முதல் நடத்த பிசிசிஐ முடிவு செய்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து முடித்தது.
இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான போட்டிகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்க உள்ளது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது, இந்த தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத உள்ளன. இந்த தொடரில் 20 லீக் போட்டிகள் மற்றும் 2 பிளே ஆப் போட்டிகள் மொத்தம் 23 நாட்கள் நடைபெற உள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்ற 5 அணிகளும் போட்டி போட்டு கொண்டு தங்கள் அணிக்கான வீரர்களை வாங்கினார்கள், இந்த ஏலத்தில் 30 வெளிநாட்டு பிளேயர்கள் உட்பட 87 பிளேயர்கள் அணிகளால் வாங்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தொடரில் நடைபெற உள்ள அனைத்து போட்டிகளும் மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மற்றும் பிரபோர்ன் மைதானங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடருக்கான முழு அட்டவணை குறித்த விவரம்
நாள் |
நேரம் |
போட்டி |
மைதானம் |
மார்ச் 4 |
7:30 P.M |
குஜராத் ஜெயின்ட்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
டி ஒய் பாட்டீல் |
மார்ச் 5 |
3:30 P.M |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS டெல்லி கேபிடல்ஸ் |
பிரபோர்ன் |
மார்ச் 5 |
7:30 P.M |
யுபி வாரியர்ஸ் VS குஜராத் ஜெயண்ட்ஸ் |
டி ஒய் பாட்டீல் |
மார்ச் 6 |
7:30 P.M |
மும்பை இந்தியன்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
பிரபோர்ன் |
மார்ச் 7 |
7:30 P.M |
டெல்லி கேபிடல்ஸ் VS யுபி வாரியர்ஸ் |
டி ஒய் பாட்டீல் |
மார்ச் 8 |
7:30 P.M |
குஜராத் ஜெயின்ட்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
பிரபோர்ன் |
மார்ச் 9 |
7:30 P.M |
டெல்லி கேபிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
டி ஒய் பாட்டீல் |
மார்ச் 10 |
7:30 P.M |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS யுபி வாரியர்ஸ் |
பிரபோர்ன் |
மார்ச் 11 |
7:30 P.M |
குஜராத் ஜெயின்ட்ஸ் VS டெல்லி கேபிடல்ஸ் |
டி ஒய் பாட்டீல் |
மார்ச் 12 |
7:30 P.M |
யுபி வாரியர்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
பிரபோர்ன் |
மார்ச் 13 |
7:30 P.M |
டெல்லி கேபிடல்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
டி ஒய் பாட்டீல் |
மார்ச் 14 |
7:30 P.M |
மும்பை இந்தியன்ஸ் VS குஜராத் ஜெயின்ட்ஸ் |
பிரபோர்ன் |
மார்ச் 15 |
7:30 P.M |
யுபி வாரியர்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
டி ஒய் பாட்டீல் |
மார்ச் 16 |
7:30 P.M |
டெல்லி கேபிடல்ஸ் VS குஜராத் ஜெயின்ட்ஸ் |
பிரபோர்ன் |
மார்ச் 18 |
3:30 P.M |
மும்பை இந்தியன்ஸ் VS யுபி வாரியர்ஸ் |
டி ஒய் பாட்டீல் |
மார்ச் 18 |
7:30 P.M |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS குஜராத் ஜெயின்ட்ஸ் |
பிரபோர்ன் |
மார்ச் 20 |
3:30 P.M |
குஜராத் ஜெயின்ட்ஸ் VS யுபி வாரியர்ஸ் |
பிரபோர்ன் |
மார்ச் 20 |
7:30 P.M |
மும்பை இந்தியன்ஸ் VS டெல்லி கேபிடல்ஸ் |
டி ஒய் பாட்டீல் |
மார்ச் 21 |
3:30 P.M |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS மும்பை இந்தியன்ஸ் |
டி ஒய் பாட்டீல் |
மார்ச் 21 |
7:30 P.M |
யுபி வாரியர்ஸ் VS டெல்லி கேபிடல்ஸ் |
பிரபோர்ன் |
மார்ச் 24 |
7:30 P.M |
எலிமினேட்டர் மேட்ச் (TBC VS TBC) |
டி ஒய் பாட்டீல் |
மார்ச் 26 |
7:30 P.M |
இறுதி போட்டி (TBC VS TBC) |
பிரபோர்ன் |
முதல் முறையாக இந்திய மண்ணில் நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.இந்த தொடர் மூலம் ஆடவர் கிரிக்கெட் போல் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு தொடருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.