விராட் கோலி தொடர்ந்து செய்யும் தவறு இதுதான்..! வாசிம் ஜாபர் அதிரடி..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 24, 2023 & 10:54 [IST]

Share

இந்திய அணியின் முக்கிய வீரர் விராட் கோலி சமீப காலமாக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், இருந்த போதிலும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை மேலும் ஒரே பவுலரிடன் இரு முறை தனது விக்கெட்டை இழந்துள்ளார்.இது குறித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒரு  கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் நடக்க விருக்கும் ஒரு நாள் உலக கோப்பையை கண்டிப்பாக கைப்பற்றி ஆகா வேண்டும் என்ற நோக்கில் சிறப்பான முறையில் தயாராகி வருகிறது.இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரின் பங்களிப்பும் உலக கோப்பை பயணத்தில் மிகவும்  முக்கியம் என்பது உறுதி.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது பழைய பார்முக்கு திரும்பி உள்ளது அனைவருக்கும் நம்பிக்கையை அளிக்கிறது, கடந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடர்களில் அதிரடியை வெளிப்படுத்தி, பின் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் சதங்கள்  அடித்து அசத்தினார்.இதனால் கோலி தனது பழைய பார்மை அடைந்து விட்டார் என்று அனைவருக்கும் நம்பிக்கை எழுந்தது.

ஆனால் இந்த நிலையை மாற்றும் வகையில் சில சம்பவங்கள் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அரங்கேறியது, இதில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் கோலி ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.இந்நிலையில் கோலி மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன,குறிப்பாக இந்திய அணியின் மூத்த வீரர் வாசிம் ஜாபர் கூறியது விராட் கோலிக்கு பல ஆண்டுகளாக லெக் ஸ்பின்னர்கள் பௌலிங்கை  எதிர்கொள்வதில் தடுமாற்றம் இருந்து வந்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர்ந்து இருமுறை இடது கை ஸ்பின்னர் மிட்செல் சான்ட்னர் பவுலிங்கில் ஆட்டமிழந்து மீண்டும் தவறை செய்கிறார்,அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் உலக கோப்பை என முக்கிய தொடர்கள் இருப்பதால் கோலி தனது ஆட்டத்தை மாற்றி தவறை சரி செய்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் கோலியின் விக்கெட்டை எடுக்கும் யுக்தியை எதிரணியினர் சுலபமாக அறிந்து கொண்டு செயல்படுவார்கள் என்று கூறினார்.

இதை சரி செய்யும் வகையில் கோலி 3 வது ஒருநாள் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது நிலையை நிரூபித்தாக வேண்டும்,அப்போது தான் அடுத்து வரும் முக்கிய தொடர்களில் விராட் கோலி சிறப்பாக செயல்பட முடியும் என்று வாசிம் ஜாபர் ஒரு சூசகமான பதிவு ஒன்றை செய்துள்ளார்.இந்திய அணிக்கு கோலியின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்று ரசிகர்களாலும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.