தோனிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் இந்த இளம் வீரர் தான்.. அடித்துச் சொல்லும் முன்னாள் இந்திய வீரர்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 17, 2022 & 12:28 [IST]

Share

பஞ்சாப் கிங்ஸின் (பிபிகேஎஸ்) பேட்டிங் பயிற்சியாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர், தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டனாக இருக்கப்போவது யார் என்று கண்டித்துள்ளார்.

2022 சீசனுக்கு முன்பாக புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இன் ஆரம்ப கட்டத்தில் மிக மோசமான தோல்விகளை தழுவியது. ஜடேஜாவின் செயல்திறன் மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில், தொடரின் மத்தியில் எம்.எஸ். தோனி, மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் ஐபிஎல் 2023 சீசனிலும் தோனி சிஎஸ்கே அணியை வழிநடத்த உள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால் 2023 சீசன் தான் ஐபிஎல்லில் அவரது கடைசி தொடராக இருக்கலாம் என்று பலர் நம்புகிறார்கள். இதற்கிடையே "எல்லாம் நன்றாக இருக்கிறது" என்ற செய்தியுடன் சிஎஸ்கே அணியில் அனைத்து மனக்கசப்புகளையும் கடந்து ஜடேஜா இணைந்தாலும், அவருக்கு மீண்டும் கேப்டன் வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக தோனிக்கு பதிலாக தனது ஆச்சரியமான தேர்வை வெளியிட்டுள்ளார் முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர். சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை தான் நியமிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “சிஎஸ்கே தோனிக்கு பிறகு டெவோன் கான்வேயை விக்கெட் கீப்பராக தக்கவைத்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் தோனிக்குப் பிறகு சிஎஸ்கேயை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்பதில் தான் அவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன். 

அந்த வகையில் கெய்க்வாட் அடுத்த கேப்டனாக இருக்கலாம். ஏனென்றால் அவர் இளைஞர். மேலும் மகாராஷ்டிராவுக்கும் கேப்டனாக இருக்கிறார். அவர்கள் அவரை அடுத்த தலைவராக உருவாக்கலாம் மற்றும் அவருக்கு 2023 சீசனிலேயே சில பொறுப்புகளை வழங்கலாம். சிவம் துபே, முகேஷ் சௌத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் சுப்ரான்ஷு சேனாபதி ஆகியோருக்கும் நல்ல வாய்ப்புகள் வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன்." என்று கூறினார்.