இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் 2023 : சச்சின் சாதனையை சமன் செய்ய விராட் கோலிக்கு வாய்ப்பு..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய மண்ணில் பல பரிட்சை மேற்கொள்ள உள்ளார்கள், நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நாக்பூரில் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கி விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற இந்த டெஸ்ட் தொடரின் வெற்றி மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி அடைய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம், கடந்த ஆண்டு தனது பழைய பார்முக்கு திரும்பிய கோலி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் சதங்கள் விளாசி அசத்தினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒருநாள் போட்டியில் 2 சதம் அடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் 3 வெற்றிகளை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் விராட் கோலி டெஸ்ட் தொடரில் தனது சிறந்த ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும், மேலும் இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு கோலிக்கு உண்டு.
அதாவது பார்டர் கவாஸ்கர் தொடரில் சச்சின் டெண்டுல்கர் 64 இன்னிங்ஸில் 9 சதங்கள் அடித்துள்ளார், விராட் கோலி 36 இன்னிங்ஸில் 7 சதங்கள் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி 2 சதங்கள் அடித்தால் சச்சின் சாதனையை சமன் செய்வார், மேலும் 3 சதங்கள் அடித்தால் புதிய சாதனை ஒன்றை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் அரங்கில் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு உதவுவார் என்று ரசிகர்கள் உட்பட பலரும் மிகவும் எதிர்பார்கிறார்கள், மேலும் தனது சிறந்த பார்மில் இருக்கும் கோலி டெஸ்ட் தொடரிலும் அதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.