Representative Image.
இந்திய அணி கடந்த ஆண்டு நடந்த டி-20 உலகக்கோப்பையில் மோசமான தோல்வியை அடைந்து வெளியேறியது, இந்த ஆண்டு பல புதிய மாற்றங்களை செய்து வரும் பி.சி.சி.ஐ நிர்வாகத்திற்கு இந்திய அணியின் முன்னால் கேப்டன் கபில்தேவ் கடுமையான விமர்சனத்துடன் அறிவுரையும் வழங்கியுள்ளார்.
இந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து வகையிலும் பி.சி.சி.ஐ இந்திய அணியை தயார் செய்து வருகிறது.
இதன் முதற்கட்டமாக ஜனவரி 1-ஆம் தேதி பி.சி.சி.ஐ நிர்வாகத்தின் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,அதில் இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு, அடுத்து வரும் சர்வதேச தொடர்களை எப்படி எதிர்கொள்வது என்பது எல்லாம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் இந்திய அணிக்கு உலகக்கோப்பை பெற்று தந்த அனுபவ மூத்த வீரர் கபில் தேவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார், அதில் இந்திய அணியின் முன்னனி வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, உள்ளிட்ட இரண்டு மூன்று வீரர்களை மட்டும் நம்பிபினால் அடுத்து வரும் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல முடியாது என்றார்.
மேலும் கபில்தேவ் அணியின் அனுபவ வீரர்கள் திறமைசாலிகள் என்பதில் ஐயமில்லை,ஆனால் அவர்களை மட்டும் நம்பி உலகக்கோப்பை தொடரில் விளையாடக் கூடாது.இந்தியா அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒன்றாக இணைந்து தான் போட்டியில் பங்கேற்க வேண்டும்.இந்திய அணியின் நலனுக்காக அணியின் தேர்வாளர்கள்,பயிற்சியாளர்கள் என அனைவரும் சில தருணங்களில் அதிரடியான முடிவுகளை எடுத்து தான் ஆகா வேண்டும்.
இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு தக்க வாய்ப்புகளை வழங்கினால் அவர்கள் அனைவரும் முன்னனி வீரர்களுடன் இணைத்து ஒன்றாக அணிக்காக சிறப்பாக செயல்படுவார்கள் என்பது உறுதி,எனவே வெறும் 2-3 வீரர்களை மட்டும் நம்பிக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக உலகக்கோப்பையை வெல்ல முடியாது என்று தனது கருத்தின் மூலம் கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கபில் தேவ் தனது அதிரடியான கருத்துகளால் கிரிக்கெட் வட்டாரங்களில் சில நேரங்களில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், சில சமயங்களில் அதில் பல அர்த்தங்கள் இருப்பதை நாம் ஏற்று கொண்டு தான் ஆகா வேண்டும்.
இவரின் இந்த பதிவிற்கு ஏற்றார் போல் தான் பி.சி.சி.ஐ யின் உயர்மட்ட உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்திய கிரிக்கெட் அணியில் பல மாற்றங்களை செய்து வருகிறார்கள்,இந்த ஆண்டு இந்திய மண்ணில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.