டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த கோலி… உற்சாகத்தில் ரசிகர்கள்…

Representative Image. Representative Image.

By Gowthami Subramani Published: November 02, 2022 & 15:30 [IST]

Share

டி20 உலகக் கோப்பை வரலாற்றில், அதிக ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. முன்னரே, இலங்கையின் ஜாம்பவானான மஹேல ஜெயவர்த்தனவை 31 போட்டிகளில் 1,016 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது இந்தியா மற்றும் பங்களாதேஷ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வீரரான விராட் கோலி அரை சதம் அடித்து மஹேல சாதனையை முறியடித்தார்.

டி20 உலகக் கோப்பை போட்டியின் தொடக்கத்தில் கோலி 24 போட்டிகளில் 1001 ரன்கள் எடுத்திருந்தார். விராட் கோலி பேட்டிங் செய்யும் போது, ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்துவதுடன், அவரது சாதனைகள் வாடிக்கையாகவே கருதப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரன் குவிக்காமல் இருந்த போதும், ஆசியக் கோப்பை 2022 போட்டியில் இருந்து அனைத்தும் மாறியது. இந்தப் போட்டியில் இருந்து மெதுவாக தனது சிறந்த நிலைக்குத் திரும்பத் தொடங்கினார்.

இவரது சாதனைகள் பெரிதாகி வந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது முதல் டி20 சதத்துடன், மிகக் குறுகிய வடிவில் அதாவது 61 பந்துகளில் 122 ரன்களை அடித்து சாதனை படைத்தார். டி20 உலகக் கோப்பையின் தொடக்கத்தில், ரோஹித் சர்மா, மார்ட்டின் குப்தில் போன்றோரைக் கடந்து டி20 போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து முதலிடம் வகித்து சாதனை படைத்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இவர் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் ஆடியதால், 82 ரன்களை எடுத்து, இந்தியாவை வெற்றி பெறச் செய்தார். இன்று, அதாவது நவம்பர் 2 ஆம் நாள் நடந்த வங்க தேசத்துக்கு எதிரான போட்டியில், கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் கோலி மீண்டும் தனது சாதனையைப் படைக்க துவங்கினார்.

அதன் படியே, வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆக்ரோஷமாக விளையாடி இலங்கையின் ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனவை கடந்து, அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், இந்தப் போட்டியின் தொடக்கத்தில் 24 போட்டிகளில் 1001 ரன்களைப் பெற்றதுடன், வங்காளதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிக ரன்களைக் குவித்ததால் கோலி ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.