Representative Image.
இந்திய மற்றும் இலங்கை அணிகள் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார்கள்,அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் கோலி,ரோஹித் போன்ற வீரர்கள் வெளிப்படுத்திய நிலையில் அண்மையில் ஐசிசி வெளியிட்ட பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச அரங்கில் தனது 45-வது ஒருநாள் சதத்தை அடித்து பல சாதனைகள் படைத்தார், மேலும் முன்னாள் வீரர் சச்சினின் சாதனையையும் இந்த போட்டியில் முறியடித்தார்.அதேபோல் காயத்திலிருந்து மீண்டு வந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற நிலையில் உலகக்கோப்பைக்கான பயணத்தை நல்ல விதமாக தொடங்கியது என்று ரசிகர்கள் நம்பிக்கை அடைந்து உள்ளார்கள், அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக அண்மையில் ஐசிசி வெளியிட்ட ஒரு நாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்து அசத்தியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா தரவரிசையில் 8-வது இடத்திற்கு முன்னேறினார், அதே போல் சதம் அடித்த விராட் கோலி 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.இந்திய அணிக்கு சிறந்த பவுலராக பணியாற்றி வரும் முகமது சிராஜ் பௌலர்கள் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி 18-வது இடத்தில் உள்ளார்.
மேலும் டி20 தரவரிசையில் இந்திய அணியின் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் சூர்யா குமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்,இவர் இதே போல் சிறப்பான பங்களிப்பை ஒருநாள் போட்டியிலும் வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்திய வீரர்கள் தொடர்ந்து அடுத்து வரும் அனைத்து ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலக கோப்பை தொடருக்கு முன்னர் பலமான அணியாக விளங்குவார்கள் என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.