முகமது ஷமி OUT.. ஜெய்தேவ் உனத்கட் IN..வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணியில் மீண்டும் மாற்றம்?

Representative Image. Representative Image.

By Sekar Published: December 10, 2022 & 11:33 [IST]

Share

ஜெய்தேவ் உனத்கட் அடுத்த வாரம் தொடங்கும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் முகமது ஷமிக்கு பதிலாக உனட்கட் முதல் டெஸ்டில் சட்டோகிராமில் அணியில் சேருவார் என்று சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

உனத்கட் தற்போது ராஜ்கோட்டில் இருக்கிறார். விசா நடைமுறைகளை முடிக்க அவர் காத்திருக்கிறார். மேலும் ஓரிரு நாட்களில் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிகம் விளையாடி வரும் உனத்கட், இந்திய அணிக்காக 2010 டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்திய அணி காயங்களால் திணறி வருகிறது. இந்த வார தொடக்கத்தில், ரோஹித் சர்மா குல்தீப் சென் மற்றும் தீபக் சாஹர் ஆகியோரும் காயம் காரணமாக ஒருநாள் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக மீண்டும் மும்பை செல்ல வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா டெஸ்டிலும், ஆடுவது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது.