அதிவேக பந்தை வீசி அரங்கை அதிர வைத்து உம்ரான் மாலிக் சாதனை ..!

இந்திய மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய முதல் டி-20 போட்டியில் இந்திய அணியின் பௌலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள்.இந்திய அணியின் இளம் வேகப்பந்து பௌலர் உம்ரன் மாலிக் மிரட்டல் பௌலிங்கால் அசத்தினார்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்றைய முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 162 ரன்களை பதிவு செய்தது,அடுத்தாக இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய பௌலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்கள்.
இந்தியாவின் ஜம்முவில் பிறந்து தனது அதிவேக பந்து வீச்சால் ஐ.பி.எல் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம் வீரர் உம்ரான் மாலிக்,இந்திய டி-20 அணியில் இடம்பெற்று தனது அதிரடி பௌலிங்கால் அசத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகவை 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசி தடுமாற செய்து அவரது விக்கெட்டை கைப்பற்றினார், உம்ரான் வீசிய அந்த பந்து தான் டி-20 போட்டியில் ஒரு இந்திய பௌலரின் அதிவேகமான பௌலிங்காக பதிவானது.
நேற்றைய போட்டியில் உம்ரான் மாலிக் 2 விக்கெட்களை பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார், இந்த டி-20 போட்டிக்கு முன்பாகவே இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இளம் வீரரான உம்ரானிற்கு போட்டியில் போதுமான அளவிற்கு வாய்ப்புகள் கண்டிப்பாக வழங்கப்படும் என்று கூறினார்.
உம்ரான் மாலிக்கின் பௌலிங்கை பார்த்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் என அனைவரும் இந்திய அணியில் வருங்காலத்தில் சிறந்த முன்னனி பௌளராக இவர் இருப்பார் என்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.