ஐ.பி.எல் 2023: ஐ.பி.எல் ஏலத்தில் ஜொலித்த டாப்-10 வீரர்கள்..! ஒரு நாளில் கோடீஸ்வரர்களாக மாறினார்கள் ..!

ஐ.பி.எல் 2023-ஆம் ஆண்டு தொடருக்கு மினி ஏலம் நேற்று கொச்சியில் நடந்து முடிந்தது,தங்கள் அணிகளில் இருக்கும் முக்கிய இடங்களை நிரப்ப அணிகள் போட்டி போட்டதால் கோடிகளில் மிதந்த வீரர்கள். இந்த ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஒரு வீரரை விற்ற ஏலமாக நேற்றைய ஏலம் பதிவானது.
இந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு போன டாப்-10 வீரர்கள் மற்றும் அவர்களை வாங்கிய அணிகளை பற்றி காண்போம்:
1.சாம் கர்ரன்
ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு போன வீரர் என்ற பெருமையை சாம் கர்ரன் நேற்றைய ஏலத்தின் முடிவில் பெற்றார்.இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் சாம் கர்ரன் ஐ.பி.எல் தொடரிலும் கலக்குவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு : இங்கிலாந்து |
ஏலத்தில் இவரை வாங்கிய அணி : பஞ்சாப் கிங்ஸ் |
ஏலத்தில் விற்கப்பட்ட விலை - 18.5 கோடி |
அடிப்படை விலை : 2 கோடி |
ஆல் ரவுண்டர் (பௌலிங் ) |
2.கேமரூன் கிரீன்
இளம் வீரரான கேமரூன் கிரீன் தனது முதல் ஐ.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள நிலையில் நேற்றைய ஏலத்தில் இரண்டாவதாக அதிக விலைக்கு போன வீராக பதிவானர்.இந்நிலையில் அவரது மீதான எதிர்பார்ப்பை தனது துரிதமான ஆட்டத்தின் மூலம் நிரூபிப்பார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
நாடு : ஆஸ்திரேலியா |
ஏலத்தில் இவரை வாங்கிய அணி :மும்பை இந்தியன்ஸ் |
ஏலத்தில் விற்கப்பட்ட விலை - 17.5 கோடி |
அடிப்படை விலை : 2 கோடி |
ஆல் ரவுண்டர் (பௌலிங் ) |
3.பென் ஸ்டோக்ஸ்
ஐ.பி.எல் தொடரில் தனது அசாத்திய ஆட்டத்தால் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வைத்திருக்கும் பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் அடிக்க விலைக்கு போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை,இந்த தொடரிலும் அவரது சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.
நாடு : இங்கிலாந்து |
ஏலத்தில் இவரை வாங்கிய அணி :சென்னை சூப்பர் கிங்ஸ் |
ஏலத்தில் விற்கப்பட்ட விலை - 16.25 கோடி |
அடிப்படை விலை : 2 கோடி |
ஆல் ரவுண்டர் (பௌலிங் ) |
4.நிக்கோலஸ் பூரன்
இந்த வருடத்தில் சிறந்த பார்மில் இருக்கும் நிக்கோலஸ் பூரன் வழக்கம் போல் தனது மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது,மேலும் இடதுகை பேட்ஸ்மேனான இவர் மிகப்பெரிய சிக்ஸர்களை அடிக்கும் அசாத்திய திறமை கொண்டவர்.
நாடு : மேற்கிந்திய தீவுகள் |
ஏலத்தில் இவரை வாங்கிய அணி : லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் |
ஏலத்தில் விற்கப்பட்ட விலை - 16 கோடி |
அடிப்படை விலை : 2 கோடி |
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் |
5.ஹாரி புரூக்
இந்த வரிசையில் அடுத்தாக இடம் பெரும் மேலும் ஒரு இங்கிலாந்து நாட்டின் இளம் வீரர் ஹாரி புரூக், இந்த வருடம் முழுவதும் தனது அணிக்காக அசத்தால் ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்டார்.ஹாரி புரூக் தனது முதல் ஐ.பி.எல் தொடரிலேயே அதிக கோடிகளுக்கு ஏலம் போனதால்,அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
நாடு : இங்கிலாந்து |
ஏலத்தில் இவரை வாங்கிய அணி :சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
ஏலத்தில் விற்கப்பட்ட விலை - 13.25 கோடி |
அடிப்படை விலை : 1.5 கோடி |
பேட்ஸ்மேன் |
6.மயங்க் அகர்வால்
ஐ.பி.எல் மினி ஏலத்தில் இந்திய வீரர்களில் அதிக விலைக்கு போன வீரர் என்ற பெருமையை பெற்றார் மயங்க் அகர்வால், இதுவரை ஐ.பி.எல் தொடரில் பல போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த முறை இவரது புதிய அணிக்காக எந்த அளவில் தனது பங்களிப்பை அளிப்பார் என்பதை காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
நாடு : இந்தியா |
ஏலத்தில் இவரை வாங்கிய அணி :சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
ஏலத்தில் விற்கப்பட்ட விலை - 8.25 கோடி |
அடிப்படை விலை : 1 கோடி |
பேட்ஸ்மேன் |
7.சிவம் மாவி
சிவம் மாவி ஒரு இளம் இந்திய பௌலர் ,தனது அடிப்படை விலையை விட பல மடங்கு அதிகமாக மனி ஏலத்தில் விற்கப்பட்டு அனைவர்க்கும் ஆச்சர்யத்தை அளித்தார்.இவர் தனது அணிக்காக எந்த அளவில் பங்களிப்பார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
நாடு : இந்தியா |
ஏலத்தில் இவரை வாங்கிய அணி : குஜராத் டைட்டன்ஸ் |
ஏலத்தில் விற்கப்பட்ட விலை - 6 கோடி |
அடிப்படை விலை : 40 லட்சம் |
பௌலர் |
8.ஜேசன் ஹோல்டர்
ஜேசன் ஹோல்டர் ஒரு அசத்தல் ஆல்ரவுண்டராக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சிறப்பாக விளையாடி வருவதால்,நேற்றைய ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்டார்.கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக மிரட்டல் ஆட்டத்தை இவர் வெளிப்படுத்தி அணியை பல போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு : மேற்கிந்திய தீவுகள் |
ஏலத்தில் இவரை வாங்கிய அணி : ராஜஸ்தான் ராயல்ஸ் |
ஏலத்தில் விற்கப்பட்ட விலை - 5.75 கோடி |
அடிப்படை விலை : 2 கோடி |
ஆல் ரவுண்டர் (பௌலிங் ) |
9.முகேஷ் குமார்
முகேஷ் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ரஞ்சி கோப்பையில் தனது சிறந்த பங்களிப்பை அளித்ததன் மூலம் இந்திய ஏ அணியில் இடம்பெற்றார்,அதனை தொடர்ந்து இந்திய ஏ அணி சார்பாக வங்கதேச ஏ-அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பௌலிங் செய்து 6/40 விக்கெட்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். இவரது சிறந்த ஆட்டத்தின் மூலமே இந்த ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்டார் என்பதில் ஐயமில்லை.
நாடு : இந்தியா |
ஏலத்தில் இவரை வாங்கிய அணி : டெல்லி கேபிட்டல்ஸ் |
ஏலத்தில் விற்கப்பட்ட விலை - 5.5 கோடி |
அடிப்படை விலை : 20 லட்சம் |
பௌலர் |
10.ஹென்ரிச் கிளாசென்
ஐ.பி.எல் மினி ஏலத்தில் தென்னாபிரிக்கா வீரர்களில் அதிக விலைக்கு போன வீரர் என்ற பெருமையை பெற்றார் ஹென்ரிச் கிளாசென்.இவர் ஒரு அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஐ.பி.எல் தொடரில் இதுவரை சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், அண்மையில் தனது சிறந்த பார்மில் இருப்பதால் அதிக விலைக்கு விற்கப்பட்டார்.
நாடு : தென்னாபிரிக்கா |
ஏலத்தில் இவரை வாங்கிய அணி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
ஏலத்தில் விற்கப்பட்ட விலை - 5.25 கோடி |
அடிப்படை விலை : 1 கோடி |
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் |